விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர்
பகுதியில் அரசு சார்பில் மகளிர் உரிமை வழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் போது காலை முதலே அமர வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு வருவாய் துறை ஊழியர் ஒருவர் குடிநீர் வழங்கினார் அப்பொழுது முதலமைச்சர் பேசும் பேச்சைக் கேட்காமல் குடிநீர் குடுப்பதா என அந்த பெண்ணை வெளியே பிடித்து துரத்து என சர்ச்சை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது இது புதியது அல்ல இதற்கு முன்பே அவர் ஒன்றிய குழு தலைவர் ஒருவரை நீண்ட சாதி தானே என பேசியதும் அதேபோல் மகளிர் இலவச பேருந்து பயணத்தினை ஓசி பஸ் என பேசியும் இதுபோல் பல்வேறு சர்ச்சைகளில் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவதே இவரது வாடிக்கையாக உள்ளது.
அதன்பின்பு அங்கு அமர்ந்திருந்த பெண் காலைமுதலே நீண்ட நேரமாக இங்கு அமர்ந்து இருக்கிறோம் குடிக்க குடிநீர் கூட அளிக்க முடியவில்லை என அமைச்சரை நோக்கி கேள்வி கேட்க வந்த பொழுது அங்கிருந்த திமுகவினர் மற்றும் அரசு ஊழியர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.