தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! கனிமொழிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்” என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் ‘சமரசம்’ என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்றபடி, ஊழல் தடுப்பு வழக்குகளிலிருந்து அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. “தண்டனை நிச்சயம் உண்டு” என்கிறார்கள்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது

கூட்டத்தொடர் காரணமாக பங்கேற்க இயலாது என வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார். அடுத்த மாதம் 13 க்கு பின் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இதற்கிடையே மற்றொரு தி.மு.க., அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மதுரை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர் 2006 ல் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் லஞ்சஒழிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரும் சட்டசபை கூட்டத்தொடரை காரணம் காட்டி பங்கேற்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். இதுபோன்று தி.மு.க., அமைச்சர்கள் சிலரது வழக்குகளை அமலாக்கத்துறை துாசி தட்ட ஆரம்பித்துள்ளது.

முதலில் அதிமுகவில் இருந்து திமுகவில் தஞ்சம் அடைந்தவர்கள் லிஸ்டை கையில் எடுத்துள்ளது அமலாக்கத்துறை. அடுத்து எம்.பிக்கள் மீதுள்ள வழக்குகளை தூசி தட்ட தயாராகி வருகிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

திமுக எம்.எல்.ஏ க்கள் 83 பேர் மீது வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்த நாடளுமன்ற தேர்தலுக்குள் திமுகவை அடக்க நினைக்கிறது டெல்லி. பெரிய வெற்றி பெறாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் தி.மு.கவில் கனிமொழிக்கு எதிராக இருக்கும் நபர்களை அமலாக்கத்துறை தூக்கும் என்ற வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். அனிதா ராதாகிருஷ்ணனும் கனிமொழிக்கு எதிரானவர் தான். ஆனால் அதற்கும் கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

Exit mobile version