அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2002-2006ல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அமைச்சரின் சொத்துக்களை முடக்கியது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சரின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து அமைச்சரின் மனுவை ஐகோர்ட் ரத்து தள்ளுபடி செய்தது..