வாழ்த்து தெரிவிப்பதில் பதவி ஏற்பு உறுதிமொழியை மீறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? சட்டப்படி நடவடிக்கை – பாஜகவின் பலே பிளான்!

திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ள திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின், இதுவரை எந்த இந்துக்கள் பண்டிகைக்கும் வாழ்த்துகள் சொன்னதில்லை. ஒரு முறை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துவிட்ட பின்னர் வாபஸ் வாங்கிய சம்பவம் அரங்கேறியது.

மேலும் மற்ற மத பண்டிகைகளுக்கு முக்கியமாக ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி கூறுவதுடன் விழாவிலும் பங்கேற்கிறார்.

திமுக தலைவராக இருந்தபோது இதெலலாம் அரவது இஷ்டம், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கலாம், தெரிவிக்கமலும் போகலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். பதவிப் பிரமாணத்தின் போது சாதி, மதம் பாகுபாடு இல்லாமல் செயல்படுவேன் என கூறி உறுதி மொழி எடுத்துவிட்டு, இந்து மதத்தை தவிர மற்ற மதங்களுக்கு வாழ்த்து கூறுவதும், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் திட்டமிட்டு வாழ்த்து கூறாமல் புறக்கணிப்பதும், மத பாகுபாடு இல்லலாமல் வேறு எதை குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின் தமிழக பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தி.மு.க அரசின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஊழல்கள் செய்ய திட்டமிடும்போதே அவற்றை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் திமுக அமைச்சர்களின் ஊழல், கமிஷன் போன்ற செயல்களையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.

மேலும், காலம் காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் திமுகவின் இந்துவிரோத நடவடிக்கைகளை எதிர்ககொள்ள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதற்காக புது ரூட்டை அந்த கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. ஒருபுறம் அறிக்கைகள், பேட்டிகள் மூலம் திமுகவின் இந்து விரோதத்தை தோலுரித்து காட்டுவது என்றும், மறுபுறம் திமுகவை சட்ட ரீதியாக எதிர்கொள்வது என்றும் தமிழக பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

அதன் தொடக்கமாக இந்து பண்டிகையான தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காததை கையில் எடுத்துள்ளது பா.ஜ.க.

இதனை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமலிருப்பது அவரது இஷ்டம். தமிழக முதல்வர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியது கடமை – கட்டாயம் – இங்கு இஷ்டத்துக்கு இடமில்லை. தொடர்ந்து பதவிப் பிரமாண உறுதி மொழிக்கு புறம்பாக திமுக நடப்பது, முழு ஆட்சியை முடிய உதவாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

Exit mobile version