கமிஷன்கேட்டு அதிகாரியை அடித்த திமுக எம்.எல்.ஏ அடாவடி .

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி. சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணியே தன்வசம் வைத்துள்ளது. அதில் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் கே.பி.சங்கர். இவர் 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறை சட்டமன்றத்திற்கு தேர்வானார். முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை மாநகராட்சியில் 5வது வார்டு கவுன்சிலராக கே.பி.சங்கர் இருந்துள்ளார். தற்போது திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது பரபரப்பு புகார் எழுந்தது. இதுபற்றி கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள இவர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version