தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கலெக்சன் கமிஷன் அரசாக மாறியது என செய்திகள் வலம் வந்தது. அது தற்போது ஆதரத்தோடு நிரூபணமாகியுள்ளது. அமைச்சர்கள் சிற்றரசர்கள் போலவும் , எம் எல் ஏக்கள் ஜமீன்கள் போலவும் உள்ளனர் . வரி வசூல் செய்து மகாராஜாவுக்கு கப்பம் கட்டி வருகின்றனர் என்ற செய்தி மக்களிடம் பேச்சுவழக்கில் உள்ளது .
மேலும் ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளில், சென்னை ரவுடிகளின் ராஜ்ஜியம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் தொழிலை நிம்மதியாக நடத்த முடியவில்லை என, தொழிற்சாலை நிர்வாகிகள் புலம்பி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு திமுகவினர் ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது, இதனால் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தொழிற் சாலைகள் வேறு இடம் செல்ல திட்டமிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க “தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் அடாவடிகளை ஜூனியர் விகடனில் வெளிவந்தது.. அதே மாதிரி, இந்தத் தலைநகரத்தின் மற்ற தொகுதிக் குள்ளேயும் போய் எம்.எல்.ஏ-க்களைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க, வசூல் தூள்பறக்குது… தள்ளுவண்டிக் கடையிலருந்து டாஸ்மாக் வரை ஒருபக்கம்… தண்ணி கனெக்ஷன், கரன்ட் கனெக்ஷன்னு மறுபக்கம் தொட்டதிலெல்லாம் வசூல்தான். பொதுக்கழிப்பறை களைக்கூட இலவசமா பயன்படுத்த முடியாதபடிக்கு வசூல்பண்ணி அடித்தட்டு மக்களை விரட்டுறாங்க… சமூகநலக் கூடங்களைப் பயன்படுத்தவும் தொகுதி எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கிறாங்க. இந்தக் கொடுமை எழும்பூர், விருகம்பாக்கம், பெரம்பூர், மயிலாப்பூர்னு எல்லா இடத்துலேயும் என மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் தான் மைலாப்பூர் திமுக வேட்பாளர் அண்ணன் மயிலை வேலுவுக்கு 2019-2020ல் ஆண்டு வருமானமே 4,93,310/- தான். மனைவிக்கு தனியாக வருமானம் கிடையாது ஆழ்வார்பேட்டையில்கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டிடத்தின் முதல் மாடியை , 2 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் வாங்கியிருக்கிறார் என செய்தி வெளி வந்துள்ளது. இது சாதனைதானே இது ஒரு திமுக எம்.எல்.ஏவின் சாதனை. அப்போ மிச்சம் உள்ள எம்.எல்.ஏக்கள் ?
விருகம்பாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் கந்துவட்டி,சூதாட்டக் கிளப்.. திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் அடாவடிகள்
விருகை பழ வியாபாரி ஒருவர், “பொதுக்கழிப்பறை, அரசு சமூகக்கூட வசூல் கொடிகட்டிப் பறக்குதுங்க. காமராஜர் சாலை யிலுள்ள சமூகக்கூடத்துல நிகழ்ச்சி நடத்த ஒரு லட்சம் ரூபாய் வரை எம்.எல்.ஏ தரப்பினர் கேட்கறாங்க. எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமான விக்கி என்பவர்தான் இந்த வசூலை நடத்துறார். கள்ளத்தனமாக மது விற்பனை செய்ய, ஒரு டாஸ்மாக் கடைக்கு 25,000 வரை வசூல் செய்றாங்க. கந்துவட்டி பிசினஸை ஆனந்த்ராஜ் என்பவரும், விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கான வசூலை ஜி.ஹெச்.தினேஷ் என்பவரும் கவனித்துக் கொள்கிறார்கள். சூதாட்டக் கிளப் வருமானத்தைக் கோட்டியும், கட்டப்பஞ்சாயத்துகளை கோழிக்கடை மேகநாதனும், ஸ்டெர்லிங் சுரேஷும் கவனித்துக்கொள்கிறார்கள். இப்படி, ஒவ்வொரு வசூலுக்கும் தனித்தனியாக ஆட்களைப் போட்டு கமிஷனில் கொழிக்கிறது எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் தரப்பு. இவர்கள் அடாவடியால் பாதிக்கப்பட்ட சின்னதுரை என்பவர், தனக்குப் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்” என்றார்.