தமிழக மக்கள் பூமியை தெரியாமல் எட்டி உதைத்தால் கூட உடனடியாக அதை பூமியை தொட்டு கும்பிட்டு மன்னிப்பு கேட்போம் அந்த அளவிற்கு தமிழக மக்கள் பூமிக்கு மரியாதை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பூமி பூஜை செங்கலை எட்டி உதைத்துள்ளார் தி.மு.க எம்.பி செந்தில்குமார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து திமுகவினர் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்களை தரக்குறைவாக பேசுவது அதிகமாகி கொண்டே செல்கிறது. சிலநாட்களுக்கு இந்துமதத்தில் உள்ளவர்கள் அனைவரும் விபச்சாரியின் மகன் என திமுக எம்.பி,ஆ.ராசா பேசி சர்ச்சையை கிளப்பினார். அந்த சம்பவம் முடிவதற்குள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பூமி பூஜையில் வைக்கப்பட்டிருந்த செங்கலை எட்டி உதைத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து மதச் சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பூமி பூஜை பொருட்களைக் காலால் எட்டி உதைத்ததால் அங்கு வந்த திமுகவினர் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரருக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளார்கள்.
தருமபுரி மாவட்டத்தில், அதியமான் கோட்டையில் புதிய நூலகம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நூலகம் அமைப்பதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக எம்பி செந்தில்குமார் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்குப் பூஜைக்காக வைத்திருந்த கற்களைக் காலால் எட்டி உதைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த திமுகவினர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இனிமேல் இதுபோன்ற விழாவுக்கு செந்தில்குமார் வரக்கூடாது என அங்குக் கூடியிருந்த திமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர். திமுக கொடியை அவர் காரில் கட்டாதது குறித்தும் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார். செந்தில்குமாரின் செயலுக்கு திமுகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















