தமிழக அரசியலில் இன்று புயலை கிளப்பியுள்ளது விஜயதரணி பாஜகவில் இணைந்தது தான். ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ பாஜகவில் ஐக்கியமானது திராவிட கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது.ஏனென்றால் அவர்களின் கட்சியில் இருந்து யாராவது பா.ஜ.கவிடம் சென்றுவிடுவார்களோ என்ற பயம்தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் விஜயதரணியின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி வருத்தப்படுகிறதோ இல்லையோ தி.மு.க ரொம்ப வருத்தப்படுகிறது.
காங்கிரசிலிருந்து விலகிய விஜயதரணி குறித்து தமிழக காங்கிரஸ் அவர்களின் X’ தளத்தில் எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது.பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளது
இந்த நிலையில் திமுக எம்.பி செந்தில் குமார்
தேர்தலை முன்னிட்டு #புள்ளபிடிக்கும்கூட்டம் தான் பாஜக. பா.ஜ.கவின் ஓரு நாள் கூத்து இதெல்லாம் கு.க.செல்வம் மற்றும் மதுரை டாக்டர். சரவணன் அவர்களுக்கு பாஜகவில் இணைந்து கிடைத்த மரியாதையும் பிறகு அவர்கள் பா.ஜ.கவை விட்டு விலகியது நாடறிந்த ஒன்று. என்று பதிவிட்டார்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் “இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இன்றைக்கு திமுக அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கால்வாசி அமைச்சர்கள் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அப்போதெல்லாம் ஆள் புடிக்கிற வேலையை உங்க கட்சி பார்த்ததா? ஸ்டாலினே பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஊழல் பெருச்சாளி செந்தில் பாலாஜியை தி.மு.கவில் இணைத்தபோது நீங்க எங்க இருந்தீங்க”
என பதிலடி தந்துள்ளார். இந்த பதிவானது பாஜகவினர் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.