தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

தமிழக அரசியலில் ஆண்ட கட்சிகளான அ.தி.மு.க வில் இருந்து தி.மு.க விற்கும், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க விற்கும் மட்டுமே கட்சி மாறுவார்கள். இப்போது இந்த இரு கட்சியில் இருந்தும் வெளியே வருபவர்களின் இருப்பிடமாக பா.ஜ.க இருக்கிறது.இது இரு திராவிட கட்சிகளுமே நல்ல செய்தி அல்ல.தி.மு.க வில் தற்போது பதவியில் இருப்பவர்கள் பல பேர் பா.ஜ.கவின் ஆதரவான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள்.

தி.மு.க வின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. வெளியில் டீ ஷர்ட் போட்டு இளமை தோற்றத்தில் பிரசாந்த் கிசோர் படத்தில் ஸ்டாலின் நடித்தாலும் அது தேர்தலுக்கு கை கொடுக்காது என்பதே உண்மை. ஏனென்றால் கட்சியினரால் வளர்க்க முடியாத கட்சியா திமுக. பலரின் இரத்தம் சிந்தி கருணாநிதி யை முதல்வராக்கிய தொண்டர்கள் சீனியர்கள் இருக்கும் வேளையில் அவர்களின் ஆலோசனை பெறாமல் பிராமணரின் ஆலோசனையின் படி திமுக செயல்படுவது அங்குள்ள சீனியர்களுக்கு பிடிக்கவில்லை .

அதுவும் தற்போது தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க வுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.இது சில மாதங்களுக்கு முன்பே பாஜகவுடன் நாடளுமன்றத்தில் 3 எம்.பிக்கள் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தனியாக பேசிய சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து தலைமை மற்றும் மற்ற எம்.பிக்கள் கேட்கையில் தொகுதி குறித்து பேசினோம் என அந்த 3 எம்.பிக்கள் கூறினார்கள். இனி தலைமை உத்தரவு இல்லாமல் யாரையும் சந்திக்க கூடாது என எம்.பிக்களுக்கு கடிவாளம் போட்டது.

தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருந்தாலும், அதிகமாக வெளியே தெரிவதில்லை.சமீபத்தில், காங்கிரசில், 23 தலைவர்கள் சோனியாவிற்கு கடிதம் எழுதி பெரும் பிரச்னையை கிளப்பியது போல, தி.மு.க.,விலும் கட்சி, எம்.பி.,க்கள் சிலர் எழுதிய கடிதம் புயலைக் கிளப்பியுள்ளது.

இக்கடிதத்தில், ‘பிரசாந்த் கிஷோர் பாண்டேவிடம் கட்சியை ஒப்படைத்தது சரியல்ல கட்சி ஒரு கம்பெனி போல நடத்தப்பட்டு வருகிறது; தொண்டர்களோடு தொடர்புடைய கட்சியான, தி.மு.க., பிரஷாந்த் கிஷோர் போன்ற ஆட்களை நம்பி பிரசாரத்தை மேற்கொள்ளக் கூடாது’ என, பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.இந்த, எம்.பி.க்கள் ஸ்டாலினைச் சந்தித்தே, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம். காங்கிராஸில்கடிதம் எழுதிய தலைவர்களை, சோனியா ஓரங்கட்டியது போல, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்த எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனராம்.

உதயநிதி கை ஓங்கி இருப்பதும் சீனியர் எம்பிகளுக்கு பிடிக்கவில்லை இதையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்களாம். மேலும் இவர்கள்தான் பாஜக முக்கியத்தலைவரை சந்தித்தவர்கள். தேர்தல் சமயத்தில் எம்.கள் இவ்வாறு நடந்து கொள்வது ஸ்டாலினுக்கு புது தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் சீனியர் தலைவர்கள் இன்னொருபுறம் உதயநிதி என இடியாப்ப சிக்கலில் உள்ளாராம் ஸ்டாலின்.

ஒருவேளை இந்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் 4 தொகுதிக்கு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது . இந்த தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தலுடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. என டெல்லி வட்டரங்கள் தெரிவிக்கின்றது. தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடிக்க ஆரம்பித்து விட்டது. தாற்போது தெரிய வந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று அமித்ஷா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திமுக எம்.பிக்கள் தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதி ள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version