மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் – காவல்துறையிடமிருந்து எஸ்கேப்!

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவரது மகன் பெரிய ராஜா.திமுகவை சேர்ந்த ராஜா குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார்,இவர் மீது வரி ஏய்ப்பு மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையில் இருந்த பெரிய ராஜா என்ற எஸ்பி ராஜா அதிகாலை காவல்துறையிடமிருந்து தப்பி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பெரிய ராஜா என்ற எஸ்பி ராஜா பாகிஸ்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சிமெண்ட் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். தமிழகத்தில் சிமெண்ட் விலையை விட வெளிநாட்டு சிமெண்ட் விலை குறைவாக இருந்ததால் விற்பனை சிறப்பாக நடந்ததாக தெரிகிறது.

குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டார். இதன் காரணமாக போலி பில் தயாரித்து சிமெண்ட் வாங்குவோருக்கு கொடுத்துள்ளார்.இவரிடம் சிமெண்ட் வாங்கிய ஒருவர் ஜி.எஸ்.டி செலுத்தும் போது சிமெண்ட் பில்லை இணைத்துள்ளார். அப்போது தான் மாட்டி கொண்டுள்ளார்திமுக பிரமுகர் ராஜா.

இதனை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய வணிக வரித்துறை ஜி.எஸ்.டி பிரிவு அதிகாரிகள் ராஜாவின் சிமெண்ட் கடைபோலி பில்கள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பும் ஏய்ப்பும் மோசடியும் நடந்ததாக தெரிகிறது. எஸ்.பி.ராஜா சட்ட விரோதமாக 6 கோடியே 50 லட்சம் வரி மோசடி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட வணிக வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ராஜா மீது அரசுக்கு வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்தது.பின் ராஜா கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் வணிகவரித்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எஸ்பி ராஜா அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு செல்லும் வழியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ராஜா அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும் அரசு ராஜா மருத்துவரிடம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளியாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறை பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி ராஜா இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் நெல்லை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகார் பெற்று வழக்கு பதிவு செய்த ஹைகிரவுண்ட் காவல் நிலைய போலீசார் தப்பியோடிய எஸ் பி ராஜாவை தீவீரமாக தேடி வருகின்றனர்.

குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த ராஜா திமுக பிரமுகர் என்பதால் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக மேலும் சில புகார்கள் நிலுவையில் உள்ளதாக வணிக வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர் உள்ளூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் இவர் மீது உள்ளது.

Exit mobile version