மதுரையில் தி.மு.க. பதவிகள் விற்பனைக்கு உள்ளதாக’ ஒட்டப்பட்ட போஸ்டரால் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழக அரசியல் என்றால் முதலில் கட் அவுட் அடுத்து போஸ்டர் தான். தற்போது பிளக்ஸ் வைக்க பல கட்டுப்பாடுகள் உள்ளதால் போஸ்டர் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.
போஸ்டர் ஓட்டுவதில் தமிழகத்தின் முதலிடம் மதுரை தான். தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில் மு.க.அழகிரி கட்சியில் இருந்தபோது மதுரையில் அவ்வப்போது ஒட்டப்படும் போஸ்டர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும்.
அதேப்போல விஜயை முதல்வர் பதவியுடன் ஒப்பிட்டும் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகள்’ என்ற பெயரில் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் போஸ்டரில் ‘வடக்கு தி.மு.க.,வில் இளைஞரணி பொறுப்பு ரூ.5 லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பு ரூ.3 லட்சம்’ என சில பதவிகளுக்கு விலை குறிப்பிட்டும் ‘பதவிக்கான தகுதி – குண்டாஸ் தண்டனை பெற்றவர்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் மதுரை நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
கட்சிக்குள் களங்கம் ஏற்படுத்த பெயர் கூட குறிப்பிட தைரியமில்லாத சிலர் போஸ்டர் பிரச்னையை கிளப்பியுள்ளனர். தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் துாண்டுதலில் இது நடந்துள்ளது என உடன்பிறப்புகள் சமாளித்து வருகிறார்கள்.