திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுது நே ரம் சரியில்லை என்றே நான் நினைக்கி றேன்.அதனால் தான் மேற்கு வங்காள த்
தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேறும் எம்எல்ஏக்கள் அவரையே குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஒரு தொகுதியில் நீண்ட நாட்களாக எம்எ ல்ஏவாக இருக்கும் ஒருவருக்கு இப்பொ ழுது உனக்கு உன் தொகுதியில் செல்வாக்கு இல்லை அதனால் வேறு ஆளுக்கு டிக்கெட் கொடுக்க போகிறோம் என்று ஒரு கட்சி தலைவர் தன்னுடைய எம்எல்ஏவிடம் கூறினாலே அந்த கட்சிக்குள் கலகம் ஆரம்பித்து விடும்.

ஆனால் மேற்கு வங்காளத்தில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் தான் ஒவ்வொரு தொகுதியிலும் யாரை நிறுத்தினால் வெற்றி பெறுவார் என்று சர்வே எடுத்து மம்தாவுக்கு அளிக்கிறது.அதை மம்தாபா னர்ஜி தன்னுடைய கட்சி எம்எல்ஏக்களு க்கு கூற அவர்களும் இத்தனை வருசம் நான் எம்எல்ஏவாக இருக்கிறேன்.

நேற்று வந்த அவர்களுக்கு என் தொகுதி யைபற்றி என்ன தெரியும்? என்று மம்தா விடம் சண்டை போட்டு வெளியேறி வரு கிறார்கள்.இதே நிலையை வருகின்ற காலங்களில் தமிழகத்திலும் காண முடி யும்.

ஏனென்றால் தமிழகத்திலும் பிரசாந்த்கிஷோர் தான் திமுக வேட்பாளர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து இவர் நின்றால் வெற்றி அவர் நின்றால் தோல்வி என்று திமுக தலைமையிடம் அளிக்க இருக்கி றார்.இதில் டிக்கெட் கிடைக்காத திமுகவினரின் டார்கெட் பிரசாந்த் கிஷோராக த்தான் இருப்பார்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்றது மாதிரி அல்லாமல் தமிழகத்தில் பிரசாந்த்கிஷோர் மீது வைக்கப்படும் குற்ற சாட்டுகள் இன ரீதியாக மாறி விடும் வாய்ப்புக ள் இருப்பதால் எங்கிருந்தோ வந்த ஒரு ஆரியரின் பேச்சை கேட்டு திராவிடர்களி ன் திறமையை ஸ்டாலின் எப்படி தீர்மானி க்க முடியும்? என்கிற கோஷம் திமுகவில் ஒலிக்கும்.


ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை தொகுதிகள் இந்த தொகுதிகளில் தான் போட்டியிட வைக்க வேண்டும் என்று பிரசாந்த்கிஷோர் தான் ஸ்டாலினு க்கு பரிந்துரை செய்து வருகிறார். இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முற்றுபெற வில்லை. இது முடிவடையும் பொ ழுது திமுகவில் இப்பொழுது உள்ள கட்சி களில் சில திமுக கூட்டணியை விட்டு வெளியேறும்.

அப்படி வெளியேறும் கட்சிகளின் டார்கெட்டும் பிரசாந்த் கிஷோராகவே இருப்பார்.அப்பொழுது ஆரிய திராவிட கருத்துக ளை பிரசாந்த் கிஷோரை நோக்கி திராவிட கட்சிகள் வைக்கும். அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு நாம் எடுத்து விட்ட ஆரிய திராவிட ஆயுதங்கள் திருப்பி நம்மையே தாக்குகிறது என்று உணர ஆரம்பிப்பார்.

பிரசாந்த் கிஷோர் இது வரை ஓடுகின்ற குதிரையை தான் கொஞ்சம் வேகமாக ஓட வைத்து இருக்கிறார். நொண்டி குதிரையான காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற ஆலோசனை அளித்து 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கியவர் பிரசாந்த் கிஷோர்.

மேற்கு வங்காளத்தில் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குமிரையே இப்பொழுது பிரசாந்த் கிஷோரினால் கீழே விழுந்து நொண்டி ஆகி விட்ட பொழுது திமுக ஏற்கனவே நோஞ்சான் குதிரை இது எப்படி ஓடப்போ கிறது? என்று பார்ப்போம்..


எழுதி வைத்து கொள்ளுங்கள் பிரசாந்த் கிஷோரினால் தான் திமுக இந்த சட்டம ன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது எ ன்று திமுகவினரே ஒப்பாரி வைப்பார்கள்.

Exit mobile version