திமுக கொடி நிறத்தில் செருப்பு அணிந்திருப்பதாக சீமான் காட்டியதால் சர்ச்சை !

சீமான் திமுகவை விமர்சனம் செய்தது மட்டுமின்றி கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென கழற்றி மேடையில் காண்பித்து பேசினார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்துல் ரவூப் என்ற தமிழ் தேசிய தொண்டரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

திமுக கொடி நிறத்தில் செருப்பு அணிந்திருப்பதாக சீமான் காட்டியதால் சர்ச்சை

அதன் பின்னர் அவர் பேசும்போது, மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏன் திமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை? இது தமிழக அரசுக்கு அவமானம் இல்லையா என்றார். இதில் இருந்தே தெரிகிறது யார் அடிமை என்று.

அது மட்டுமின்றி திமுகவை விமர்சனம் செய்ய கையோடு கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென்று கழற்றி மேடையில் காண்பித்தார். அப்போது நான் ஜனநாயக வழியில் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பு ஆகும். மேலும், என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் எனறு காட்டமாக கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version