சிவபெருமானை அவமதித்த உதயநிதி ஸ்டாலின் …

பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருச்சி சென்றுள்ளார்.  உதயநிதிக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுப்பதற்கு கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவிலில், திமுக நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.  

ஈசன் திருக்கோவில் அளித்த மரியாதையை உதயநிதி ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார்.

கோவிலில் தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதை ஏற்றுக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் மறுத்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது.  இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக ஈசனை அவமதித்து விட்டார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.அவர் நாத்திகராக இருந்து விட்டுப் போகட்டும். 

ஏன் சிவன் கோவிலில் பூர்ண கும்ப வரவேற்பிற்கு திமுககாரர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்?  உதயநிதி ஸ்டாலின் நாத்திகர் என்று அவர்களுக்குத் தெரியாதா?  இதில் ஏதோ சதி திட்டம் உள்ளது. உதயநிதியை நாத்திகன் என்று காட்டவேண்டி கோவிலில் பூர்ண கும்பம் கொடுப்பதற்கு திமுக ஏற்பாடு செய்ததா?  என்று கோபமாக கேள்விக்கணை தொடுக்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.  

திமுககாரர்கள் கேட்டுக் கொண்டாலும், பூர்ண கும்ப மரியாதை ஏன் அளிக்க வேண்டும்? ‌ ஈசனை விட பணம் முக்கியமா உங்களுக்கு? என்று சிவாச்சாரியார்களை ஒரு சிலர் கேள்வி கேட்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் வினவிய போது, “எங்களுக்கு பணம் முக்கியமில்லை, ஆனால் இவர்களைப் பகைத்துக்கொண்டு நாங்கள் எப்படி ஊரில் வசிக்க முடியும்?  எங்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்?” என்கிறார் பெயர் சொல்ல விருப்பம் இல்லாத சிவாச்சாரியார். 

நாத்திகராக இருக்கும் திமுக குடும்ப வாரிசுகள் சர்ச்சுக்கு சென்று கேக் சாப்பிடுவார்கள்; மசூதிகளுக்கு சென்று கஞ்சி குடிப்பார்கள்;  ஆனால் ஈசனை மட்டும் அவமரியாதை செய்வதா? என்று கொதிக்கிறார்கள் உண்மையான சிவனடியார்கள். 

இந்துக்களின் வாக்கு மட்டும் திமுகவுக்கு தேவை, ஆனால் இந்துக் கடவுள்களை அவமானப்படுத்துவதே இவர்கள் தொழிலாக உள்ளது.  இந்து வாக்கு வங்கி அமைவது மட்டுமே இம்மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்கிறார் அரசியல் நோக்கர் நாகராஜன்.

கட்டுரை:- பத்மநாபன் நாகராஜன்

Exit mobile version