திமுக கூட்டணியில் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், மதிமுக, VCK, இடதுசாரி கட்சிகளுக்கு மிகக்குறைவான தொகுதிகளும் ஒதுக்கியது போன்ற ஒரு உத்தேச பட்டியல் வேறு சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் போராட்டங்களை நிகழ்த்தியதில் திமுகவுடன் களத்தில் நின்றது மதிமுகவும் VCK வும் இடதுசாரி கட்சிகளும்தான். கொள்கை அளவில் தி.மு.கவை நீண்டகாலத்திற்கு வலுப்படுத்தக்கூடிய கட்சிகள் என்பதும் இவைதான் இந்த கட்சிகளுக்கு அதிகமான இடங்களில் ஒதுக்குவது என்பது திமுக தமிழகத்தில் தன்னை நீண்ட காலம் நிலை நிறுத்திக் கொள்வதற்கு உதவும்.
சிறிய கட்சிகள் என்ற காரணத்திற்காக இந்த கட்சிகளுக்கு குறைவான இடங்களை ஒதுக்கவதாகவும் மேலும் அவர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துவது தி.மு.கவின் பித்தலாட்டம்ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தேர்தல் கூட்டணியில் முக்கியத்தும் கொடுத்தும் இவர்களை பலவீனப்படுத்தும் தி.மு.கவுக்கு பாதகமாக அமையும்.
மேலும் தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றை சமாளிக்க திமுகவால் முடியாது அப்போது இந்த சிறு கட்சிகள் இருந்தால் தான் உதவும் என்பதும், இந்த கட்சிகளுக்கு அதிகமான இடங்களில்ஒதுக்குவது என்பது திமுக தமிழகத்தில் தன்னை நீண்ட காலம் நிலை நிறுத்திக்
கொள்வதற்கு உதவும் எதார்த்தம்.
மேலும் காங்கிரஸ் திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க மறுத்து வருகிறது. திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் என்ன செய்யலாம்? – மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை காங்கிரஸ் ஆலோசனை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மதிமுகவும் விசிகவும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.
அமுமுக கூட்ட்டணிக்கு கதவை திறந்து வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டது. இது காங்கிரசுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். 8 தொகுதிகள் வெற்றி பெற்றால் கூட மதிமுக கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.என்று வைகோ கூறிவிட்டார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிறிய கட்சிகளை திமுக கழட்டிவிட்டால் அது அதிமுகவிற்கு கூடுதல் பலம்.. எனவே திமுக தான் தற்போது சிக்கலில் உள்ளது.