திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு என் மண், என் மக்கள் நடை பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றார்.அங்கு அவருக்கு பாஜக சார்பில் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்பு அங்கு அவர் பேசியதாவது;-

தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களின் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் புகார் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலை பா.ஜ., குழந்தைகள் வளர்ச்சிக்கான தேர்தலாக பார்க்கிறது. ஆனால், தி.மு.க., வீட்டில் உள்ள தங்கள் குழந்தைகள் வளர்ச்சிக்காகவே தேர்தல் நடத்துகின்றனர்.

இதனை மக்கள் புரிந்து கொண்டு, தேர்தலில் கட்சி அதன் திட்டங்கள், தொலைநோக்கு பார்வைகள், தங்கள் பிரச்சினைகள் பேசக்கூடிய பா.ஜ., எம்.பி.,யை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version