நாமக்கல்லில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள். சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை அவர்கள் பேசியபோது திமுகவை கடுமையாக சாடினார். “வாக்கு வங்கிக்கா தீவிரவாதத்தை திமுக ஊக்குவிகிறது. வன்முறைக் களமாக தமிழகம் மாறி வருகிறது” என கூறினார்.
பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் நாமக்கல் நகரிலும், ஆணும், பெண்ணும் சமம் என்ற சனாதன கருத்திற்கு சாட்சியாக நிலைநிற்கும் அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரர் வாழும் திருச்செங்கோடு மண்ணிலும், என் யாத்திரை கோலாகலமாக நடந்தேறியது.மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை துவக்கிய போது, வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் அதே போராட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற வீரர்கள் பாடிச் செல்வதற்கு, சுதந்திர தாகத்தை ஏற்படுத்தும் ஒரு கீதமாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற பாடல் விளங்கியது.
தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க, தமிழகம் முழுதும் ஒவ்வொரு தொகுதியாக, ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்து வரும் யுத்தம் தான், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம்.
பழங்குடியின மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்ததது. எனினும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் திமுகவினர் பாகிஸ்தான் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்புகின்றனர். திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். முன் எப்போதும் நடந்திராத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு போடுகின்றனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது” என்றார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.