கடந்த 8-ந்தேதி பி.பள்ளிபட்டியில் புனித லூர்து அன்னை தேவாலயத்துக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையை தேவாலயத்திற்கு செல்ல கூடாது என திமுகவை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கலகம் ஏற்படுத்த முற்பட்டனர். இது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இரு நாட்களுக்கு முன்னர் 8-ஆம் தேதி தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பி.பள்ளிபட்டியில் நடைபயணம் மேற்கொண்டார். அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் இருக்கும் கோவில்கள், தேவாலயம், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடம் இருந்தால் அங்கு சென்று மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதே போல் பி.பள்ளிபட்டியில் நடைபயணம் மேற்கோவதற்கு முன் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த திமுகவை சேர்ந்த சில இளைஞர்கள், அண்ணாமலையை தேவலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு கிளம்பியது. மேலும் அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர். அப்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு அண்ணாமலைக்கும், திமுக இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், விளக்கமளித்தார் அண்ணாமலை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் திமுக தான் சிக்கும். ஏனென்றால் தேவாலயம் என்பது குறிப்பிட்ட நபர்களின் சொத்து என்றால் இந்து கோவில்களையும் தனியார் அரசு பிடியிலிருந்து விடுவிக்க பாஜக கோரும். ஏனென்றால் இது மதசார்பற்ற நாடு,அனைவரும் உரிமை உள்ளது தேவாலயத்துக்கு செல்லலாம் மேலும் 150 தொகுதிகளுக்கு மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அவர்கள் பல தேவாலயங்களுக்கு சென்றுள்ளார் அங்கு எந்த வித பிரச்சனையும் இல்லை… என பாஜக ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் அவ்வழக்கு கொடுத்தவர் மீது மத கலவரம் தூண்டுதல் பேரில் பாஜக வழக்கு தொடுக்கும்.
மேலும் அண்ணாமலை தேவாலயங்கள் மற்றும் மற்ற மதத்தினர் வழிபடும் ஆலயங்களுக்கு செல்லும் போது காவல்துறை பாதுகாப்புடன் அழைத்தது செல்லப்பட்டு ராஜ மரியாதை அளிக்க வேண்டும். இந்த சிக்கலில் தான் தற்போது தி.மு.க உள்ளது. தேவையில்லாத ஆணியை புடுங்கிய திமுக. வான்டட்டாக வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்துள்ளது..என திமுக என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
மேலும் முதலில் பாஜக வழக்கு தொடுக்கலாம் என்று நினைத்தது அனால் இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தது ஆனால் அதில் அரசியல் செய்யலாம் கிறிஸ்துவ மத மக்களை பாஜகவுக்கு எதிராக திருப்பலாம் என்ற எண்ணத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. என பாஜக வட்டரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் நீதிமன்றம் முரசொலி விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை திசையை திருப்பவேஇந்த வழக்கு என்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். தி.மு.கவின் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிட்டுள்ளது. பாஜக