சென்னையில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு கொண்டுவரும் அனைத்து நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவது தான் திமுகவின் உள்நோக்கம் என்றதுடன், அதிமுக அரசு பொங்கல் பரிசை அறிவித்த நிலையில் அதனை எடுத்து மக்களுக்கு திமுக அளிக்கிறது என்றார். அதிமுகவின் பொங்கல் பரிசை திமுக எம்.எல்.ஏ. வழங்குவதாக கூறிய அமைச்சர் திமுகவினர் உப்பு போட்டு சாப்புடுகின்றனரா..? என்பது சந்தேகமாக உள்ளது என்றார்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பக்குவமில்லாத அரசியல்வாதியாக உதயநிதி திகழ்வதாக கூறினார். சசிகலா ஒரு பெண் என்பதால் அவரை கொச்சை படுத்தி பேசுவது பெண் இனத்தையே கொச்சைபடுத்தி பேசுவது போன்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெண் இனத்தை கேவளபடுத்துவது, தனிமனதர்களை தாக்குவது போன்ற ஆபச அரசியல் செய்வதை திமுக தவிர்க்க வேண்டும் என்ற அமைச்சர், திமுகவின் இதே நிலை தொடர்ந்தால் கருணாநிதி, ஸ்டாலின் செய்த லீலைகள் காற்றில் பறக்கும் என்றார்.
மேலும், அதிமுகவின் பொறுமையை சோதிக்க நினைத்தால் திமுகவுக்கு பின் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.