ஜெய் பீம் படம் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஜாதி பிரச்சனையை தூண்டும் விதமாகவும் தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தும் விதமாகவும் ஜெய் பீம் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டு சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்பட காட்சிகள் அமைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது.
படம் வெளிவந்த நாள் முதல் தினந்தோறும் விவாத பொருளாக மாறியது ஜெய் பீம் திரைப்படம்.ஊடகங்கள் திமுக, திருமாவளவன்,கம்யூனிஸ்ட்கள் ஈ.வே.ரா. கும்பல்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு அலைத்து வந்தார்கள். ஆனால் வன்னிய சமுதாய மக்கள் மற்றும் இந்து அமைப்புகள், ஜெய் பீம்க்கு எதிராக நின்றார்கள். விஷயம் பெரிதாக பெரிதாக பாட்டாளி மக்கள் கட்சி களத்தில் இறங்கியது. விஷயம் அன்பு மணி சூர்யாவுக்கும்,பாரதிராஜாவுக்கு எதிராக கடிதம் எழுதினார்.
இதனால் விஷயம் பெரிதாக வெடித்தது சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என பாமக நிர்வாகி கூறியது,வட தமிழகத்தில் சூர்யா திரைப்படம் ஓடிய தியேட்டரை மூட வைத்தது,ரசிகர் மன்றங்கள் கலைப்பு என சூர்யாவுக்கு எதிராக பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜெய் பீம் திரைப்படத்தை எதிர்க்க பிரிந்து கிடந்த அனைத்து வன்னியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்தது.
இந்த நிலையில் ஜெய்பீம்க்கு ஆதரவாக சொம்பு அடித்த ஊடகங்களின் நெறியாளர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாமகவை சேர்ந்த சூர்யா நெறியாளர் தம்பி தமிழரசனை கிழித்து தொங்கவிட்ட சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ
”பாமக சூர்யாவிடம் ஜெய் படத்தை பாமக எதிர்ப்பது தவறு என்ற அடிப்படையில் தம்பி தமிழரசன் கேட்க அப்போது உதயநிதி கர்ணன் திரைப்படத்தில் வரும் வருடத்தை மாற்ற சொன்னாரே அப்போது உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டதா. அப்படத்தில் வருவது படைப்பு சுதந்திரம் என யார் யார் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர்களோ அவர்கள் அனைவரும் எங்களை (பாமக ) கேள்வி எழுப்பலாம் என சூர்யா தம்பி தமிழரசனை சம்பவம் செய்தார்.
ஜெய்பீம் பட கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று எங்களை கேட்கும் நீங்கள், கர்ணன் பட விவகாரத்தில் உதயநிதியை தலையிடக்கூடாது என்று கேட்டீர்களா ? என கேட்டு அதற்கு தம்பி தமிழரசன் என்ன நீங்கள் டைரக்சன் செய்ய வேண்டாம் என தெரிவிக்க பதிலுக்கு சூர்யா நீங்கள் என்னை கேள்வி எழுப்பியது போல் நான் உங்களை கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் என எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் உங்கள் நடுநிலைமை செலக்டிவ் நடுநிலைமையா.. என்று கேள்வி கேட்க நெறியாளர் சற்று கோபமடைந்து மரியாதை குறைவாக பேசினார்.
இதற்கு முன்னர் இதே போன்று வேறு சேனல் ஒன்றில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் யார் புகைப்படத்தை காலண்டரில் வைக்க வேண்டும் என நெறியாளர் சுகிதா எழுப்பிய கேள்விக்கு பாமகவை சேர்ந்த வினோபா, தொல். திருமாவளவன் போட்டோவை வைக்க வேண்டும் என கூறியதும் அதன் பிறகு நெறியாளர் பதறியதும் குறிப்பிடத்தக்கத