மாணவர்கள் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை. கல்வி மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கனும் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.நீட் தேர்வு வருவதற்கு முன் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள், நீட் தேர்வு வந்த பிறகு எத்தனை கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்காமல் போனது போன்ற விபரங்கள் எல்லாம் நடிகர் சூர்யா வசம் உள்ளதா.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களை பார்த்து ஏன் இன்னும் நீட்டை ரத்து செய்யவில்லை என்று இந்த நடிகர் சூர்யா குரல் எழப்ப முடியுமா. சமமான கல்வியையும் தரமான கல்வியையும் கொடுங்கன்னு அரசாங்கத்தை கேட்காமல் ஏழை பிள்ளைகள் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நீட் வேண்டாம் சொல்றது சுத்த அயோக்கியத்தனம் ஏழை பிள்ளைகள் எல்லாம் முட்டாள் ன்னு நினைச்சுட்டாங்க போல.
எங்க பிள்ளைகளுக்கு சமமான தரமான கல்வியை கொடுத்துட்டு நீட் வைங்க என்று ஒருத்தனும் சொல்லலையே.12 ம்வகுப்பு வரை தரமான கல்வி தந்தா எந்த நுழைவு தேர்வுக்கும் ஏன் பயப்படனும்.ஆசிரியர், சட்டபடிப்பு, ஐஏஎஸ் போன்ற படிப்புகளுக்கு நுழைவுதேர்வு என சகலத்துக்கும் நுழைவு தேர்வு இருக்கும் பொழது நுழைவுத் தேர்வே கூடாது என்று பேசுவது, அதுவும் இந்த கூத்தாடிகள் மாணவர்களை காக்கும் ரட்சகர் போல பேசுவதும் கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு நீட் பரிட்சையில் 98% நம் மாநில கல்வி திட்டத்திலிருந்துதான் கேள்விகள் வந்தது – 2017 ல் வெறும் 38% ஆக இருந்த மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 57 % ஆக உயர்ந்திருக்கிறதா இல்லையா? கடந்த ஆண்டு கொரோனா காலத்திலேயே சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுதியிருக்கிறார்களா இல்லையா?
2006 முதல் 2016 வரை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 213 தான்.. ஆனால் கடந்த ஆண்டு எடப்பாடி அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடால் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள்
நீட் மதிப்பெண் மூலம் மற்ற மாநில அகில இந்திய கோட்டாவில் மாணவர்கள் சேர முடியும். உச்ச நீதிமன்றம் NEET-ஐ உறுதி செய்துவிட்டது. NEET வேண்டாமென நீங்கள் உண்மையாகவே விரும்பினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராடுங்கள்.