ஓட்டெல்லாம் போட வேண்டாம்.. அதிகார தொனியில் மிரட்டிய மா.சுப்பிரமணியன்… வைரலாகும் வீடியோ…

அதிகார தொனியில் மிரட்டிய மா.சுப்பிரமணியன்

அதிகார தொனியில் மிரட்டிய மா.சுப்பிரமணியன்

நீ ஓட்டு போட வேண்டாம், பொட்டியில் வைத்து பூட்டு வைத்து கொள்’…கிராம சபை கூட்டத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூறிய பெண்ணிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகார தொனியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் கலந்து கொண்டு நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள பிரச்சனைகளை கூறி வந்தனர். பெண் ஒருவர் வடிகால்வசதி இல்லை, அதனை ஏற்படுத்தி தர வேண்டும், எங்களை பிரச்சனைகள் குறித்து ஊர் தலைவரோ, வார்டு உறுப்பினரோ வந்து கூட எட்டிப்பார்க்கவில்லை, ஓட்டு மட்டும் கேட்க வந்தார்கள் என அமைச்சரிடம் கேட்டார்.

அதற்கு அமைச்சர் ‘நீ ஓட்டெல்லாம் போட வேண்டாம், பொட்டியில் வைத்து பூட்டு போட்டு கொள்ளுங்கள்,’ என பதிலளித்த்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஓட்டெல்லாம் போட வேண்டாம்.. அதிகார தொனியில் மிரட்டிய மா.சுப்பிரமணியன்.வைரலாகும் வீடியோ. #dmkfails
அதிகார தொனியில் மிரட்டிய மா.சுப்பிரமணியன்.
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version