காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு.
இதனுடைய விளைவாகத்தான் இதுபோன்ற அவமதிப்பு செயல்கள் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்று நடவாது இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவமதித்த நபரை உடனடியாக கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும் இந்த தவறான செயலை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட நினைக்கின்ற நபர்கள், கலவரத்தை தூண்டுகிற மாதிரி வீடியோ பதிவிட்ட அந்த நபர் மீதும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
காவல்துறை எடுக்கின்ற அமைதி நடவடிக்கைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாறு இந்து முன்னணி வேண்டிக் கொள்கிறது.
இன்று கொரோனா தீ நுண் கிருமியின் கொடூரத்தால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற இந்த காலகட்டத்தில் நாம் எல்லோரும் பொறுமையாக இருந்து நிதானமாக சிந்தித்து எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அவலமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்குள் ஜாதி பிரச்சனையால் மேலும் அல்லல் ஏற்படுத்தாமல் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்!! தமிழகத்தை காப்போம்!!
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















