வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறிய டாக்டர் ஷர்மிளா..வட்டியும் முதலுமா கொடுத்த நடிகை கஸ்தூரி!

KasthuriShankar

KasthuriShankar

கடந்த நவம்பர் மாதம் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது . தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் கமாரெட்டி தொகுதியில் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியும் போட்டியிட்டனர்.

இரு பெரும் முதல்வர்கள் வேட்ப்பாளர்களை எதிர்த்து பாஜக சார்பில் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி கமா ரெட்டி களமிறங்கினார். இந்த களத்தில் இரு முதல்வர் வேட்பாளர்கள் இருவரையும் வீழ்த்தி அதிரடியாக வெற்றி பெற்றார் பாஜகவின் கேவிஆர் என அழைக்கப்படும் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி.

முதல்வர் வேட்பாளர்ளை பாஜக வேட்பாளரான கேவி ரமணரெட்டி தோற்கடித்த சம்பவம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்நிலையில் நகர மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக கமாரெட்டி பேரூராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது வீட்டை பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி கடந்த சனிக்கிழமை இடித்தார்.

இந்நிலையில் நகர மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக கமாரெட்டி பேரூராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது வீட்டை பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி கடந்த சனிக்கிழமை இடித்தார்.இந்த விஷயம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்திருந்தார். அதில் நம்புகிறீர்களோ இல்லையோ! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி சாலை அமைக்க தனது சொந்த வீட்டை இடித்துள்ளார். என்ன ஒரு மனிதன்! ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆர் இருவரையும் அவர் தேர்தல் மேடையில் வென்றதில் ஆச்சரியமில்லை! என குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த டாக்டர் ஷர்மிளா, ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிச்சிருக்காங்க…இதுல என்ன பெருமை? அரசு இடிச்சா அசிங்கம்னு முந்திகிட்டு… ஏதோ தியாகி மாதிரி வேஷம் போட வேண்டியது …இதுக்கு What a man!என கஸ்தூரியின் பதிவை ரீடிவீட் செய்து பதில் அளித்திருந்தார். ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி தரமான பதிலடி கொடுத்தார்

அதில் பட்டா மோசடி எல்லோருக்கும் கைவருமா? நிலத்தை அபகரித்து ஏரியை ஆக்கிரமித்து ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளி, ஹோட்டல் என்று கட்டி சட்டம் நெருங்கினால் வயசாயிடிச்சு, நெஞ்சுவலி என்று சொல்லும் திருடர்களுக்கு வலிய சென்று விதிமீறலை திருத்திக் கொள்வதெல்லாம் புரியாது.. என அதிரடியாக கூறியுள்ளார். அவர்கள் இருவரது பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version