சீன தற்போது உள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்க இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 0.371 சதவீதம் சரிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மிக சாதாரணமாக தெரியும் இந்த விஷயம் வரும் நாட்களில் மிக பெரிய பொருளாதார சேதத்தை உலக அளவில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அது 2007-08 ஆம் நிதி ஆண்டு காலப்பகுதிகளில் அமெரிக்காவில்.வரிசையாக வங்கிகள் திவால் ஆகும் சூழ்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இதில் முதலில் முன்னுரை பாடியது லேமன் பிரதர்ஸ் என்கிற நிறுவனம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திவால் ஆனதாக அறிவித்தது. அது சமயம் அதன் 639 பில்லியன் டாலர்கள் அசையா சொத்தாகவும் 613 பில்லியன் டாலர்கள் புழக்கத்தில் இருந்தாகவும் கணக்கு காட்டினார்கள்.
உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சம்பவம். பரிதவித்து போனார்கள் அமெரிக்க மக்கள். ஆனால் யாராலும் அங்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வளவு ஏன்.புகழ் பெற்ற நம் தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர் அந்த சமயத்தில் அந்த நிறுவனத்தில் தான் வேலை பார்த்து வந்தார். அவராலும் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.பாவம்.
அது அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வரலாற்றில் ஏற்படுத்தின தாக்கம் இன்றளவும் அமெரிக்க பிரஜைகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கிறது. சரியாக சொன்னால் ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேற இதுவும் ஒரு காரணம்.
எவ்விதம் எனில் தன் குடிமக்களை கசக்கி பிழிந்து வரியாக பெற்று தன் படைகளை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா வைத்திருக்கிறார்கள் என்று பிரசாரமே செய்தனர் அங்கு….. அவ்வளவு மோசமானது நிலைமை கை மீறி சென்றது.
பத்து சதவீதமான மறைமுக பொருளாதார வீழ்ச்சி கண்டது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் என்கிறார்கள் ஆவணகாரர்கள். இது உலக முழுவதும் வெவ்வேறான தளங்களில் எதிரொலித்தது. அதுதான் பின்னாளில், சீனாவின் பொருளாதார மண்டலம் வேர் பிடித்து கிளை பரப்பி வளர்ச்சி காண காரணமாக அமைந்தது என்கிறார்கள். இன்றைய தேதியில் நாம் காணும் சீனாவின் அசுர வளர்ச்சி என்பது அதன் பின்னூட்டம் என்கிறார்கள் அவர்கள்.
இதே பாணியில்.சீனாவின் மிக முக்கியமான மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எவர் கிராண்ட் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதன் மதிப்பு சுமார் 300 பில்லியன் டாலர்கள். இன்றுள்ள சூழ்நிலையில் சீனா இருக்கும் நிலையில் அவர்களுடைய நிதி நிலைமை தள்ளாடும் சூழ்நிலையில் லட்ச கணக்கான சீன மக்களின் பங்களிப்புடன் விளங்கும் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மிக மோசமான நிலையை சீனாவிற்கு ஏற்படுத்தி விட்டது.
இது சீனாவை மட்டும் அல்லாமல் ஊஹான் வைரஸ் போல் ஒட்டுமொத்த ஆசிய நாடுகளை கண்ணுக்கு தெரியாத தளத்தில் பாதிக்கும் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக சம்மட்டி அடி சந்தித்து வரும் சீன வர்த்தகம் இந்த சம்பவத்தால் உலக அளவில் சீனாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் தாக்கு பிடித்து மீண்டு வர சீனாவிற்கு சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள் உலக வர்த்தக நிபுணர்கள்.இந்த சமயத்தில் சீனா கடந்த காலத்தில் செய்த பல திரைமறைவு தில்லுமுல்லு ஒவ்வொன்றாக தற்போது சமயம் பார்த்து வெளி வர தொடங்கி இருக்கிறது.
உலக அளவிலான பங்கு சந்தை பட்டியலில் முதல் ஐம்பது இடங்களுக்குள் கொண்டு வர பல்வேறு கட்ட நடவடிக்கைகளை சூதாட்டம் போன்று பல சீன நிறுவனங்கள் செய்து வந்திருக்கிறார்கள். அப்படி பட்ட ஒரு நீர்க்குமிழி நிறுவனம் தான் தற்போது வெளிவந்துள்ள எவர் கிராண்ட் நிறுவனம் என்கிறார்கள் அவர்கள்.
இந்த நிறுவனத்தின் முதலீடுகளாகஇந்தியாவை சேர்ந்த சிலர் பங்கு கொண்டு இருக்கிறார்கள்..அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் முதலீடு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். இதில் நம் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமே சுமார் 28 முதல் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருப்பதாக பீதியை கிளப்புகிறார்கள்.
நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் பணத்தை அதிகவட்டி தருவதாக சொல்லி இங்கு உள்ள சில நிறுவனங்கள் மூலமாக பெற்று அவற்றுக்கு ஈடாக பாண்ட் பத்திரங்கள் எல்லாம் வழங்கி, அவற்றை வேறோர் விதமாக இந்த பெரிய நிறுவனத்தில் மடை மாற்றம் செய்து இருக்கிறார்கள்.
விஷயம் அறிந்தவர்கள். இது எந்த அளவுக்கு நிஜம் என்பது தற்போது வரை வெளியே தெரியவில்லை. தவிர.எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு பதவிக்கு வந்ததும் சடுதியாக நிலத்தின் விலை உயர்ந்தும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருப்பதற்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா என்கிற கோணமும் தற்போது விவாதிக்கப்படுகிறது.
வலது சாரி சிந்தனையாளர் : ஸ்ரீராம்