தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்..
சமீபத்தில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில், தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட 100 கேள்விகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாத மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டது..
கடந்த சனிக்கிழமை (12.07.25) அன்று தமிழகமெங்கும் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட 100 கேள்விகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாத மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என பெரும்பாலான தேர்வு எழுதிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது .
பல ஆண்டுகளாக அரசு வேலை கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் வாழ்வில் ஒரு சிலரின் தவறுகளால் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
மேலும் விடைத்தாள்கள் கொண்டு சென்ற பெட்டிகள் ஆங்காங்கே உடைந்து திறந்த நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
ஆகவே தமிழக அரசு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வை உடனடியாக ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது…
