தமிழகத்தை உலுக்கும் போதை ஊசி! துடிதுடித்து பலியான கஞ்சாமணி! சென்னையில் மட்டும் 5 பேர்பலி!

drug case

drug case

போதை ஊசி என்ற பெயரில் பல இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறி வருகிறது . 16 வயது முதல் 22 வயது வரையுள்ள இளம் பருவத்தினரிடையே போதை ஊசிப் பழக்கம் அதிகரித்துள்ளது.” வலி நிவாரணியைச் சாதாரணமாக சாப்பிடும்போது அது செரிமான மண்டலத்தில் செரித்து, ரத்தத்தில் கலந்து பின் தூக்கம் வரும். ஆனால், அந்த மாத்திரையை நீரில் கலக்கி நரம்புகளில் நேரடியாக செலுத்துவதால் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்படுத்தும். மதுவை விட விரைவில் போதை தருவதாக நம்பி இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

“கல்லூரியில் ஆண், பெண் பாகுபாடின்றி சிலரிடம் இந்தக் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவிட் கால ஊரடங்கு இடைவெளியில் படிப்போ, பணியோ இன்றியும், வீட்டிலும் கேட்க ஆளின்றியும் இருக்கும்போது இதுபோன்ற பழக்கம் இளைஞர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போதை ஊசி புழக்கம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி துடிதுடித்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா மணி எனும் தீனதயாளன் (26). திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா மணி எனும் தீனதயாளன் (26). திருட்டு, அடிதடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடியான கஞ்சா மணி போதை ஊசி செலுத்திக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா மணி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு(20) ஆகியோருடன் அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்ட கஞ்சா மணி போதை தலைக்கேறியதால் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி சுருண்டு விழுந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள்/

பின்னர் கஞ்சா மணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சென்னையில் போதை ஊசி செலுத்தி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version