போதை பொருள் கடத்தல் மன்னனும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது! இனி தான் கச்சேரி ஆரம்பம்!

Jaffer Sadiq

Jaffer Sadiq

தேசிய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனனும் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி முன்னாள் துணைஅமைப்பாளருமான ஜாபர் சாதிக் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

டெல்லியில் கடந்த வாரம் போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்த அதிரடி சோதனையில் இரண்டு போதைப் பொருள் குடோனை கண்டறிந்து சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும்.

இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தான் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான், தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

.ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க் ரொம்பவே பெரிதாக இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என சர்வதேச அளவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் கோலோச்சி வந்திருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், அரசியல் பிரமுகராகவும் அவதாரமெடுத்து போதை, சினிமா, அரசியல் என மூன்று தளங்களிலும் செல்வாக்காக வலம் வந்த ஜாபர் சாதிக். போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை ஜெய்ப்பூரில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது தேசிய போதைப்பொருள் தடுப்பு காவலதுறை. இதனை தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் சென்னை கொண்டு வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

யார் இந்த ஜாபர் சாதிக் என்று தேடிப்பார்த்தால் முதன் முதலில் சென்னை பர்மா பஜாரில் தொழில் தொடங்கியுள்ளார் திருட்டு, ‘சிடி’ விற்றது தான் ஜாபர் சாதிக்கின் முதல் தொழில் . அதன் பின் அதில் வளர்ந்து போதை பொருள் கடத்தல் தொழிழை மேற்கொண்டுள்ளார்.தற்போது கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவனாக மாறியுள்ளன். ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தல் தொழில் சாம்ராஜ்யம் குறித்து, பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்கின் நெட் ஒர்க் உலகம் முழுவதும் உள்ளது.இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையும் இறங்கியுள்ளதால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த தி.மு.கவினர் மட்டுமின்றி சினிமாதுறையினரும் கலக்கத்தில் உள்ளார்கள். பல உண்மைகள் வெளிவரும் தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்ப உள்ளது ஜாபர் சாதிக் கைது..

ஜாபர் சாதிக் கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது :

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Exit mobile version