கேப்டன் ஆன்மா சும்மா விடுமா ‘வெய்ட் பண்ண சொல்றா அவன’ வடிவேலுவை அசிங்கப்படுத்திய ட்ரம்ஸ் சிவமணி. வைரலாகும் வீடியோ.

Vadivelu Vijayakanth

Vadivelu Vijayakanth

சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இந்த இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் மரணமடைந்தார். இச்செய்தி தமிழகத்தில் பேரிடியாக அமைந்தது. ரஜினி விஜய் உட்பட பல திரை பிரபலங்கள் விஜயகாந்த் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை நேரிடையாக வந்து செலுத்தினார்கள்.

விஜயகாந்த் மறைவுக்கு பின்னும் கடந்த சில வாரமாகவே சமூக வலைத்தளங்களில் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் முன்னிலை பெற்று வருகிறது. முக்கியமாக வடிவேலு சம்பந்தப்பட்ட்டதாகவும், கருணாநிதி ஜெயலலிதா பத்திரிகையாளர்கள் குறித்து விஜயகாந்த் பேசிய வீடியோ…தான் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்கள். ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் இன்னும் வரவில்லை.

அவ்வளவு ஏன் அவர் இன்னமும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.அதிலும் ரசிகர்கள் பலர், வடிவேலு நன்றி கெட்டவர், மோசமான மனிதர் என்றெல்லாம் விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். சொல்லப்போனால், சோசியல் மீடியாவில் நடிகர் வடிவேலு குறித்து தான் விவாத பொருளாகவே மாற்றி விட்டார்கள். இப்படி ஒரு நிலையில் வடிவேலு சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவிற்கு சென்று இருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலருக்கும் வடிவேலு மீது மேலும் வெறுப்பு தான் ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் வடிவேலுவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் ட்ரம்ஸ் சிவமணி. விழாவிற்கு ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி என்று தமிழ் சினிமாவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் சென்று இருந்தனர். அவர்கள் அனைவரும் பேட்டரி கார் மூலம் அரங்கிற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

https://x.com/lavanyadeepak/status/1744341910410461694?s=20

அந்த வகையில் இந்த விழாவிற்கு வடிவேலு வந்த போது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேட்டரி காரில் ட்ரம்ஸ் சிவமணி ஏறி அமர்ந்து கொண்டார். அப்போது அங்கிருந்த வடிவேலுவின் உதவியாளர் ஒருவர் இது வடிவேலு போக வேண்டிய கார் என்று சொல்ல ‘அவன வெய்ட் பண்ண சொல்றா’ என்று பேசியுள்ளார் சிவமணி. பின்னர் வடிவேலுவின் உதவியாளர் வாக்குவாதம் செய்தார். பின்னர் வேறு ஒரு காரிலும் வடிவேலுவை ஏற்றாமல் போக கடைசியில் பார்த்திபன் வடிவேலுவை அமர வைத்து அழைத்து சென்றார்.

Exit mobile version