கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் துரைமுருகன் பேச்சால் பரபரப்பு !

கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியுள்ளன. ஆனாலும், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்வர் படேலும், மறைந்த முதல்வர் கருணாநிதியும் பேசினர். பிரச்னையை தீர்க்க முடியவில்லை.

வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின் தமிழகம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், பிரதமர் மோடியை சந்தித்தபோது அவர், ‘காவிரி பிரச்னை குறித்து, தமிழகத்துடன் பேசி தீர்த்து கெள்ளுங்கள்’ என கூறியுள்ளார். ஆனால், பேச்சு வாயிலாக தீர்த்துக் கொள்ளலாம் என்பது, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மார்கண்டேயன் அணை கட்டுகின்றனர். அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் அவர்கள் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை கூட நடத்த பயப்படும் அளவிற்கு திமுகவிடம் தெம்பு இல்லையா என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் திமுகவை கலாய்த்து வருகின்றனர்

Exit mobile version