இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.

கொவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் போது, ​​நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான தோட்டக்கலைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசாங்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்த கட்டத்தில் விவசாயிகளை பெரும் துயரில் இருந்து காப்பற்றுவதாக உள்ளன.

தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டம் (MIDH) என்பது பழங்கள், காய்கறிகளின் வேர்கள், கிழங்குப் பயிர்கள், காளான் இனங்கள், பூக்கள், நறுமணமுள்ள தாவரங்கள், தேங்காய், முந்திரி, கொக்கோ மற்றும் மூங்கில் ஆகியவற்றை உள்ளடக்கிய தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான மைய நிதியுதவித் திட்டமாகும். நீலகிரி விவசாயிகள் அதிக அளவில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் MIDH திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள்.

தோட்டக்கலைத் துறையின் உதவியுடன் இ –நாம் பிரபலமடைந்து வருவதாக நீலகிரி விவசாயிகள் கூறியுள்ளனர்.

தொழில் முறையில் மருத்துவராகவும், விவசாயத்தில் உள்ள ஈடுபாட்டால் விவசாயியாகவும் உள்ள டாக்டர் சந்தீப், கோயம்புத்தூர் ஃபீல்ட் அவுட்ரீச் பணியகத்திற்குக் கருத்து தெரிவிக்கும் போது, ​​அவரும் அவரது நண்பர்களும் நீலகிரி மாவட்டத்தில் பயிரப்படாமல் அழிந்து போகும் நிலையில் இருக்கக்கூடிய காய்கறிகளைப் பயிரிட்டு வருவதாகத் தெரிவித்தார். சந்தைப்படுத்தல் அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்த நிலையில், மத்திய அரசின் இ – நாம், தேசிய வேளாண் சந்தை தளம் விவசாயிகளின் கவலைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்றார். தரமான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்த விவசாயிகளால் விற்பனையாளர்களின் சிக்கலான சந்தைப்படுத்தல் நடைமுறைகள் காரணமாக சாகுபடியின் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இதன் விளைவாக, பொருளுக்குத் தகுதியான விலையை விவசாயி பெறாத நிலையில், நுகர்வோரும் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது என அவர் கூறினார். மேலும், இ – நாம் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பும் அவர், அரசாங்கத்தின் முன்முயற்சியை வரவேற்றுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சந்தைப்படுத்தல் விற்பனை மையங்களிலும் இ-நாம் கட்டாயமாக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அருகிலுள்ள நிலையத்திலும் பொருளின் உற்பத்தி விலையை அறிய விவசாயிக்கு இது உதவும். தன்னுடயை பொருளின் விலையை நிர்ணயிப்பதற்காக அவர் நடைமுறை நாளில் உள்ள சந்தை விலையையும், அந்த பொருளுக்கான தேவையையும் மதிப்பிடுவார்.

இ–நாம் இணைய தளம் மூலம், விவசாயி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர் பெறும் இறுதி விலையைக் காண முடியும், இதனால் அவர் தனது தயாரிப்புகளின் மதிப்பை அறிந்து கொள்ளவும், சரியான விலையைக் கோரவும் முடியும். இதனால் இ – நாம் இணைய தளம் விவசாயிகளுக்கு உற்பத்திக்கான சரியான விலையைப் பெற அதிகாரம் அளிக்க முயற்சிக்கிறது.

நீலகிரி மலர் வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் வாஹித் சையத் கூறுகையில், சுமார் 2500 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் உயர் தொழில்நுட்ப மலர் வளர்ப்பில் 300 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார். பூக்களின் விதைகள் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாலும், அவற்றை வளர்ப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் நடவுப் பொருள்களை வாங்குவதாலும் மலர் வளர்ப்பு ஒரு பெரிய முதலீட்டை உள்ளடக்கியது என்றார். வேலை மற்றும் உற்பத்தி இழப்பைக் கருத்தில் கொண்டு ஊரடங்கின் போது, ​​டெல்லி, பம்பாய் மற்றும் கொல்கத்தா போன்ற பல்வேறு இடங்களுக்கு பூக்களை எடுத்து செல்ல, விமான சரக்குக் கட்டணத்தை விவசாயிகளுக்கு நெருக்கடி நேரத்தில் குறைவாக நிர்ணயித்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். தோட்டக்கலைத் துறை கொரோனாவை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் தன்னலமற்ற பணியாளர்களின் சேவையை, மலர் வடிவமைப்புகளை உருவாக்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் அனைவரையும் வீட்டிலேயே தங்குமாறு வலியுறுத்தியுள்ளது. நீலகிரியில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்கான மரியாதைக்குரிய அடையாளமாக, அத்தகைய தன்னலமற்ற பணியாளர்களை நீலகிரியில் அரசாங்க தாவரவியல் பூங்காவிற்கு அழைத்து,  மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு அந்த பூங்காவில் உள்ள அந்த மலர் வடிவமைப்புகளை சுற்றி காட்டினர்.

விமான சரக்குப்போக்குவரத்துக் கட்டணத்தை குறைக்க வாஹித் வேண்டுகோள்

நீலகிரியில் கொரானாவை எதிர்த்துப் போராடும் பணியாளர்கள்

Exit mobile version