சோதனை மேல் சோதனை…. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மேற்பார்வையில் மணல் விற்பனை….

குவாரிகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனையால் தற்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏனெனன்றால் அதிரடி சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் கிட்ட தட்ட 1.5 லட்சம் டன் இருந்துள்ளது. இந்த மணலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை லாரிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளில் அள்ளிப்போடும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், சட்ட விரோத பண பரிமாற்ற புகார் எழுந்த நிலையில், ஒப்பந்ததார்களின் இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குவாரிகள், யார்டுகளில் சோதனை நடந்த போது, ஒப்பந்ததாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர். சோதனை முடிந்த நிலையில், இந்த யார்டுகள் மீண்டும் செயல்படவில்லை. அதேநேரத்தில் இந்த யார்டுகளில், கணக்கில் வராமல் மணல் இருப்பு வைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல், தமிழக அரசு அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யார்டுகளில் கணக்கில் வராத மணலை ஆன்லைன் விற்பனை திட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. முறைகேடு புகாரில் சிக்கிய யார்டுகளில், 1.5 லட்சம் லோடு மணல் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த மணல் முறையாக கணக்கில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது, அமலாக்கத்துறை மேற்பார்வையில், நீர் வளத்துறை அதிகாரிகள், ஆன்லைன் முறையில் பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்கி வருகின்றனர். அரசு நிர்ணயித்த விலையில், முறையான நடை சீட்டு அடிப்படையில், வரையறுக்கப்பட்ட அளவு மணல் மட்டுமே லாரிகளுக்கு வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 100 முதல், 150 லோடு மணல் வழங்கப்படுகிறது. சோதனை மேல் சோதனை என்ற பாடல் தான் தற்போது மணல் குவாரிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Exit mobile version