ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாடியிருந்த நிலையில்
அழுகிய முட்டை குறித்த கேள்விக்கு, அமைச்சர் கீதா ஜீவன் புது விளக்கத்தை கொடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.
“அழுகிய முட்டை விநியோகம் செய்தவர் 96க்கும் மேற்பட்ட முட்டைகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம். முட்டையை உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனை செய்தனர்.
தமிழ்நாடு அரசுக்கு முட்டை விநியோகம் செய்பவர் திங்கள், புதன், சனி அல்லது வெள்ளி ஆகிய மூன்று நாள் கொண்டு வருவர். அதில் கலர் வைக்க வேண்டும். ஏனென்றால் பழைய முட்டை உபயோகப்படுத்திவிட கூடாது என்ற காரணத்தால். ஆகவே, அன்று முட்டையில் கருப்பு கலர் வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு என முட்டையில் போடப்பட்டு இருந்தது.அன்று மழை.. தார்பாய் இல்லாமல் வண்டி வந்துருக்கு..அப்போது கருப்பு மை உறிஞ்சி கருப்பு கலர் இறங்கி உள்ளது.. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டாச்சு.
நமக்கு கித்னா பேருக்கு தெரியும் முட்டை அழுகி போக முட்டை தான் காரணம்னு நெட்டிசன்கள் அமைச்சர் கீதா ஜீவன் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















