நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது, இந்தியாவின் ஆறெல்லாம் வற்றி நாமெல்லாம் சாகப்போகின்றோம் என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டது.
உண்மையில் இது 2006 காங்கிரஸ் அரசின் வரைவு, பின் சிலசக்திகளின் எதிர்ப்பால் அதை பரணில் போட்டது காங்கிரஸ், இப்பொழுது அதில் சில திருத்தங்களை செய்கின்றது மோடி அரசு அவ்வளவுதான்.
இந்த சட்டம் என்ன சொல்கின்றது?
மத்திய அரசு கடல் வனம் மற்றும் இதர விஷயங்களை தன் கட்டுபாட்டில் எடுக்கின்றது , இனி இந்த பசுமை தீர்ப்பாயம் போன்ற இம்சைகள் எல்லாமிருக்காது
ஆனால் மாநில அரசின் உரிமைகளை மீறிமத்திய அரசு ஒருநடவடிக்கையும் எடுக்காது, மாநில அரசின் முழு சம்மதத்துடனே மத்திய அரசு அனுமதி வழங்கும்
சுருக்கமாக சொன்னால் சட்டம்சொல்லும் திட்டம் என்ன தெரியுமா?
சீனாவில் இருந்து விரட்டபடும் நிறுவணங்களை தேசம் வரவேற்கின்றது, இந்தியா முழுக்க பெரும்தொழில் நிறுவணங்கள் வர இருக்கின்றன, இந்நிலையில் தொழில் அனுமதிக்கு நீண்டகாலம் கோர முடியாது, கோரினால் நிறுவணங்கள் இந்தியாவினை விட்டு சென்றுவிடும்
இதனால் சுற்றுசூழல் சட்டங்களை கொஞ்சம் எளிமைபடுத்துகின்றது இந்தியா, வேறொன்றுமல்ல. இதனால் வனம் அழியும் , ஆறு வற்றும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய பொய்
சரி இந்த சட்டம் வந்தால் என்னாகும்?
சட்டம் வந்தால் தொழில் தொடங்குதல் எளிதாகும், எக்காரணம் கொண்டும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலோ இல்லை மேட்டூர் அணையின் நடுவிலோ தொழில் நிறுவணம் வரபோவதில்லை எது பொருத்தமான இடமோ அங்கு வரும்
முன்பு காமராஜர் திருச்சி திருவெறும்பூருக்கு பெல் கொண்டுவந்தார் அல்லவா? அப்படி
இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?
இச்சட்டம் வந்தால் தொழில் நிறுவணங்களுக்கு அனுமதி எனும்பெயரில் சம்பாதிக்க முடியாது, ஸ்டெர்லைட் போல கட்சிகள் அள்ளமுடியாது, வசூல் நடக்காது
அடுத்து கடற்கரை மிகபெரும் கட்டுபாட்டில் வரும் பொழுது தாதுமணல் அள்ள முடியாது, கடற்கரையோர கடத்தல் நடக்காது
கானகம் அரசு கட்டுபாட்டில் இருக்கும் பொழுது அங்கும் கடத்தல் பதுக்கல் நக்சலைட் நடமாட்டம் ஆகியவை இருக்காது
குறிப்பாக இந்த கல்குவாரி, மண்குவாரி, கிரானைட் குவாரி இவை எல்லாம் கடும் கண்காணிப்புக்கு வரும், இவை எல்லாம் இல்லையென்றால் மாநில கட்சிகள் கதை முடிந்துவிடும்
இதனால்தான் அய்யய்யோ….நாட்டுக்கு ஆபத்து என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது, ஆபத்து நாட்டுகல்ல கட்சிக்காரன் வீட்டுக்கு.
இச்சட்டம் நாட்டுக்கு தொழில்வளர அவசியமானது, எதெல்லாம் இங்கு கமிஷன் கலெக்சன் என மாநில கட்சிகளுக்கு வழிவைத்ததோ அதில் கைவைக்கின்றது மத்திய அரசு
அவ்வளவுதான் விஷயம்
இங்கே ஆற்றுமணலை திருடியபொழுது வராத சத்தம், கிராணைட் குவாரி என குளமும் வயலும் உடையும்பொழுது வராத சத்தம்
வறண்ட ராதாபுரம் பக்கம் கல்குவாரிக்கு அனுமதி என பூமியினை தோண்டி கல்லெடுக்க அனுமதி கொடுத்து இன்று திமுக அதிமுக பினாமிகள் மாபெரும் கடல் அளவு பள்ளம் தோண்டி அப்பக்கத்தையே கதற வைத்திருக்கும் பொழுது வராத சத்தம்
கல்குவாரி, தாதுமணல் என எங்கெல்லாமோ சுரண்டி சுற்றுசூழலையே அழித்தபொழுது வராத சத்தம்..
மரம் வெட்டி கட்சியும், மரம் வெட்டி வீரப்பனையுமே வாழ்க என கோஷம் போடும்பொழுது வராத சத்தம்..
தாமிரபரணியே தனியார் ஒருவனுக்கு என பாய்ந்தபொழுது வராத சத்தம்
நாடெல்லாம் குடிநீர் கம்பெனிகள் ஆற்றையும் அணையினையும் நிலத்தடி நீரினையும் உறிஞ்சிவிற்கும் பொழுது வராத சத்தம்..
திருப்பூர் சாயபட்டறை சிக்கல் உச்சத்தில் இருந்தபொழுது வராத சத்தம்..
நில ஆக்கிரமிப்பு மிக உச்சத்தில் இருந்தபொழுது வராத சத்தம்..
ஆற்றிலும் காட்டிலும் மலையும் மண்ணும் களவுபோய் ஒருதுளிநீருக்கு ஏங்கும்பொழுது வராத சத்தம், குளத்து வரப்புகளெல்லாம் செங்கலுக்கும், குளத்து பனைகளெல்லாம் சூளைக்குமாய் வெட்டி கடத்தபட்டு குளங்களும் தனியாருக்கு பட்டா என்றான பின்னும் வராத சட்டம்..
அட வாய்கால்களும் வரப்புகளும் ஆக்கிரமிக்கபட்டு ஏரிகளே காணாமலாக்க செய்த பின்னும் வராத சத்தம்..
மத்தியரசு ஒரு சட்டம் கொண்டுவந்தவுடன் வருக்கின்றதென்றால் இதன் பின்னணியில் இருப்பவர் யாரென புரிந்துகொள்ளல் நலம்
அதுவும் காங்கிரஸ் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது தேசத்தின் நலன் என சொல்லியாதெரிய வேண்டும், காங்கிரஸ் சொன்னபடியெல்லாம் நிலமை இருந்தால் காஷ்மீர் மீண்டிருக்குமா? சீனா பின்வாங்கியிருக்குமா? இல்லை இன்னும் பெரும் நன்மையெல்லாம் நடந்திருக்குமா?
அந்த ரெட் கலர் ஆண்டி யாரென தெரியவில்லை, எவனோ ஒரு அப்பாவிபெண்ணை பேசவைத்து பின்னணி இசையெல்லாம் கோர்த்து பரப்பிவிட்டிருக்கின்றான்
அம்மணி வசமாக சிக்கிவிட்டது, இனி அவனவன் கேட்கும் கேள்விக்கு அது பதிலளிக்கமுடியாமல் ஓடி ஓளியபோகின்றது, கொரோனா நேரம் என்பதால் மாஸ்க் போட்டு அது தப்பிக்கலாம்
இந்த சுற்றுசூழல் சட்டதிருத்தம் மகா அவசியமானது, நாடு புத்துயிர் பெறும் நேரம் உலக கம்பெனிகளை தன்பக்கம் இழுக்கும் நேரம் அவர்கள் தொழில்தொடங்க சில அவசர வசதிகளை செய்துகொடுத்தல் மகா அவசியம் அதுதான் இச்சட்டம்
அதுவும் மாநில அரசு மறுக்கும் இடங்களிலோ நிச்சயம்பசுமை போகும் இடங்களிலோ இச்சட்டம் பாயாது
மாறாக இச்சட்டம் தொழில்வளாகமெல்லாம் மரம் வளர்க்கவும் இன்னும் பசுமை காக்கவும் பெரும் வழிவகை எல்லாம் செய்கின்றது
இச்சட்டத்தை நாம்வரவேற்கின்றோம், காலசூழல் தேசத்துக்கு சாதகாகமாக இருக்கும்பொழுது இங்கு தொழில்வளர இது மகா அவசியம்
நம்மை பின்பற்றுபவர்களுக்கு புரியும். நாம் சிலமாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சட்டம் வரும், இங்கு ஏராளமான தொழில்வாய்ப்புகள் வரும்பொழுது அரசு அதற்கு வாய்பளிக்க தொழிலாளர் சட்டம் மற்று இம்சை பிடித்த சுற்றுசூழல் சட்டத்தை திருத்தும் என சொல்லியிருந்தோம்
உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கலாம், அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றதே அன்றி வேறல்ல..
இந்த போலி போராளிகளை பின் தள்ளுங்கள், இதெல்லாம் சீன கைகூலிகள் இந்திய தேசிய எதிர்களின் வழக்கமான விளையாட்டு அன்றி வேறல்ல..
இந்த சிகப்பு சேலை ஆண்டி, தமிழகம் முழுக்க சுற்றிவரட்டும் இங்கு நடந்திருக்கும் மலை மணல் கிராணைட் தாதுமணல் அத்துமீறி ஆக்கிரமிக்கபட்ட குளம் வாய்க்கால்,நிலத்தடி நீரை1000 அடிக்கு கீழ் கொண்டு சென்ற தரைகீழ் கல்குவாரிகள்
செங்கல் மணல் திருட்டு அதனால் நடந்த பனைமர அழிவு, தாதுமணலால் நடந்த கடற்கரைஅழிவு என ஏகபட்ட விஷயங்களை பார்ககட்டும்
அதன் பின் பேசட்டும், ஏம்மா செய்வீர்கள் அல்லவா? சரி அதற்கு முன் ஒரு கேள்வி
நீங்கள் யார்? நீங்கள் வசித்த கிரகம் எது? எப்படி பூமிக்கு அதுவும் தமிழ்நாட்டுக்கு திடீரென வந்தீர்கள்?
30 வருடமாக தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டு கொண்டிருந்தபொழுது எங்கே இருந்தீர்கள்? என்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது அல்லவா?
அதற்கு முந்தைய கேள்வி இப்படித்தான் எழுகின்றது?
கட்டுரை :- ஸ்டாலின் ராஜன் வலதுசாரி எழுத்தாளர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















