வழக்குகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிய க.பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து பதவி விலகியிருப்பது திமுகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அதேநேரத்தில், இயல்பாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் பதவி விலகல்கள், நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றிருப்பது திமுக தலைமையிலான தமிழக அரசுக்குப் பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளதுதி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் தானாக ராஜினாமா செய்ய மருமகன் தரப்பு கூறிவருகிறதாம் தேர்தல் நேரத்தில் வழக்குகள் தீவிரமடையும் வேளையில் எம்.எல்.ஏ பதவி பறித்து சிறைக்கு அனுப்பினால் திமுக கட்சியை காப்பாற்ற முடியாது என உளவுத்துறை கூறியுள்ளதாம்.
எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிவந்த மூத்த அமைச்சர் க.பொன்முடி, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாசமான கருத்தை அண்மையில் தெரிவித்தது பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ வழிவகுத்தது. இதையடுத்து அவருக்கு அரசியல்ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தன. பொன்முடி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, தாமாகவே முன்வந்து விசாரிக்கத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார்.
இதன் தொடர்ச்சியாகப் பொன்முடியும் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக திமுக தலைமை, அவருடைய கட்சிப் பதவியைப் பறித்தது. அப்போதே அவருடைய அமைச்சர் பதவி குறித்தும் முதல்வர் முடிவு செய்திருந்தால், சர்ச்சைப் பேச்சுகளை அரசு சகித்துக்கொள்ளாது என்கிற சமிக்ஞையை மக்களுக்குக் கொடுத்திருக்கும். அது பிற அமைச்சர்களுக்குக் கடிவாளமாகவும் இருந்திருக்கும்.திமுகவை பொறுத்தவரை மேடைகளில் ஆபாசமாக பேசுபவரை தாற்காலிகமாக நீக்குவது போல் நீக்கிவிட்டு மீண்டும் சேர்த்து எதிர்கட்சிகளின் தலைவர்களை கொச்சையாக பேசுவதை ரசித்து வருகிறது. எடுத்துக்காட்டு ஆ.ராசா,சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,சைதை சாதிக் ஆர்.எஸ் . பாரதி என பட்டியல் நீண்டு கொண்டே போகும்
இதற்கிடையே நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாக பொன்முடி இப்போதாவது பதவி விலகியிருப்பது மற்ற அமைச்சர்களுக்குப் பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2011 – 2015 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாக, அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் 2023 ஜூன் 14இல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள்களுக்குப் பிறகு 2024 செப்டம்பர் 27 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை பிணையால் வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு நாள் இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தியாகி செந்தில் பாலாஜி என வர்ணிக்கப்பட்டார் முதல்வரால். எனவே, அவருடைய பிணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, பிணை வேண்டுமா என்று நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது. இதில் தனக்குப் பிணைதான் தேவை என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்தவுடனே அவர் உடனடியாக அமைச்சராக்கப்பட்டது அப்போதே விவாதத்துக்குள்ளானது. ஊழல் வழக்குகளை எதிர்கொண்டபடி பல்வேறு மாநிலங்களிலும் முதல்வர், அமைச்சர்கள் பதவியில் இருக்கவே செய்கின்றனர். ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைச் சகித்துக்கொள்வதில் சமரசம் செய்துகொள்ளப்படுகிறது என்பதையே இது உணர்த்துகிறது. இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரியை உருவாக்கும் வாய்ப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதைத் தட்டிக் கழித்துவிட்டது.
இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறது. முதல்வராகவோ அமைச்சராகவோ இருந்துகொண்டு ஒருவர் வழக்கை எதிர்கொள்வது சந்தேக நிழலோடு பார்க்கப்படவே வழிவகுக்கும். இது ஊழல் வழக்குகளில் ஆளுங்கட்சிகள் சமரசம் செய்துகொள்கின்றன என்கிற தவறான அர்த்தத்தை மக்களுக்குக் கொடுத்துவிடும். அந்த வகையில், நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக செந்தில் பாலாஜி பதவி விலகியிருப்பது, தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டு வழக்குகளை எதிர்கொள்வோரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆளுங்கட்சிகள் தீவிரமாகச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும் மேலும் வரிசையாக திமுக அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி வருகிறார்கள் இன்னும் 6 மாதத்தில் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் மொத்தமாக திமுகவின் கூடாரம் காலியாகிறது.
எந்த எந்த அமைச்சர்கள்:
தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.
இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்
2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது.கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.
வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்,கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. ‘தடை உத்தரவு தொடரும்’ என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் இந்த அணைத்து வழக்குளில் திமுக அமைவிஹார் உள்ளே செல்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது