இந்திய சுதந்திர போராட்டத்தில் மூன்று மாநிலங்கள் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தன. தமிழகம், மகாராஷ்டிரம், வங்களாம் ஆகியன. அதிலும் பெருமைக்கு உரியது நமது தமிழ்நாடு. சுதந்திரத்திற்காக உயிரை துச்சமாக மதித்து தடியடியும், தூக்குமேடையும், கொடுஞ்சிறையும் ஒரு பக்கம் தமிழர்கள் அனுபவித்த அதே காலக்கட்டத்தில் தான் நீதிக்கட்சி, திராவிட கழகம் போன்றவை வெள்ளைக்கார கொடுங்கோலன் ஆட்சியின் அடிவருடிகளாக இருந்து, சுதந்திர போராட்டத்தை நீர்த்துப்போக செயல்பட்டன என்பதும் வரலாறு.
ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டாமல் தமிழக கவர்னர் உரை முடித்ததற்கு கொங்கு வேளாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டுத் தெரிவித்து, ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக சித்தரித்து, தமிழக முதல்வர் முன்னிலையில் பேசியுள்ளார்.ஜெய் ஹிந்த் என்பது தமிழகத்தின் வீரத்தியாகி செண்பகராம பிள்ளையின் லட்சிய கோஷம். இதனை மூத்த எழுத்தாளர் திரு. ரகமி ஆதாரத்துடன் அவரது சரித்திரத்தை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சட்டமன்ற உரையில் வேகம் காட்டிய ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினருக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்தது. ஜெய் ஹிந்த் என்ற கோஷம் முழுவதும் ஆக்கிரமித்தது. அமித் ஷா வரை சென்ற இந்த பிரச்சனையால் சிக்கி கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள். இதன் பின் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் நான் ஜெய் ஹிந்த் என்ற கோஷத்திற்கு எதிரானவன் கிடையாது. இன்று பாரதத்தில் பல பேர் ஜெய்ஹிந்த் என்று உணர்வுபூர்வமாக சொல்லி கொண்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்..! இதற்கு நானும் ஒரு காரணம் என்று பேட்டி அளித்துள்ளார்
இப்போதைய உரையில் சமாளிப்பு இருக்கிறது.. இது தேசியத்தின் வெற்றி. என்றே கருதுகிறார்கள் ஈஸ்வரனின் காலங்கடந்த பின் வாங்கலில் நமக்கான சேதி ஒன்று இருக்கிறது. தமிழகத்தில் தேசியம் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அந்தச் சேதி. திராவிடத்துக்கு எதிரான களத்தில் கலாசார வெற்றியை தேசியம் எப்போதோ வெற்றி பெற்று விட்டது.
பகுத்தறிவு பேசும் திமுக கையில் வேல் ஏந்தியது இது இந்துக்களில் ஒற்றுமை வலிமையை திமுக உணர்ந்திருக்கிறது. நாங்கள் இந்துக்கள் என்று சொல்லித்தான் திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் மதிமாறன்களை மறைத்து வைத்தார்கள், வீரமணி யை விலக்கி விட்டார்கள். கருப்புச் சட்டைகளைக் காணவில்லை. தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















