அமெரிக்காவில் செயல்பட்டு “வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ” என்ற அமைப்பு, ஆண்டு தோறும் உலக பொருளாதாரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் 2019 ஆம் ஆண்டு உலக பொருளாதார குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இதன் மூலம் 2.83 டிரில்லியன் டாலருடன் இருக்கும் இங்கிலாந்து மற்றும் 2.71 டிரில்லியன் டாலருடன் இருக்கும் பிரான்ஸ் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.
இத்தியாவின் இந்த முன்னேற்றமானது தன்னிச்சையான பொருளாதார கொள்கையில் இருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருகிறது. இதனால உலக பொருளாதாரம் இன்று இந்தியாவை பார்க்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில், இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலராக உள்ளது, இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும்.
உலக பொருளாதரத்தை ஒப்பிடும் பொது நிலையான வளச்சியில் இந்தியா உள்ளது. உள்நாட்டு வளர்ச்சி விகிதம் ஏற்றம் இறக்கமாக கணபப்டும் இது உலக பொருளாதார மந்த நிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணம் ஆகும் என கூறியுள்ளது.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















