தமிழக அரசின் நிவாரண பொருட்களில் காலாவதியான பொருட்கள்! மக்களுக்க அதிர்ச்சி அளித்த இலவசம்!

Expired items

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாத காலமாக முழு ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடித்து வருகிறது தமிழக அரசு. ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். தினம் வேலைக்கு செல்பவர்கள் வேலை இழந்துள்ளார்கள்

ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா நிவாரணமாக தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைகளுக்கு ரூ.4,000ம், 14 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பும் வழங்கப்படும் என்று மாநில அரசு கூறியது. இதில் கடந்த மே மாதம் டோக்கன் வழங்கி அதன்மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 ரொக்கம் விநியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து நடப்பு ஜூன் மாதம் இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் இலவச மளிகைத் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு வழங்கும் இலவச மளிகை தொகுப்பில் காலாவதியான பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 14 பொருட்களில் இந்த மளிகைத் தொகுப்பில் சில பொருட்கள் காலாவதி ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சிக்கு உட்பட்ட கொருக்கம்பேடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட பொருட்களில் டீ தூள் பாக்கெட் காலாவதி ஆகியுள்ளது.

இதை கவனித்த பொது மக்கள் ரேஷன் கடைகளை முற்றுகை இட்டார்கள். டீ தூள் மட்டுமல்லாமல் வேறு சில மளிகைப் பொருட்களும் காலாவதியாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை மாற்றினார்களா இல்லை அரசின் தொகுப்பிலிருந்து அனுப்பப்பட்டதா என விசாரித்து வருகிறார்கள். இதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்

Exit mobile version