“கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் போராடிக்கொண்டிருக்கிற வேளையில், உங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள் சமூகமாக இருக்க உதவி, உலகை ஒன்றிணைப்பதே முகநூலின் நோக்கம் என்கிறீர்கள். என்றாலும், கடந்த சில மாதங்களாக முகநூலில் நடப்பவை அதன் நோக்கத்துக்கு எதிராக உள்ளதை காண்கிறோம். 2019 லோக்சபா தேர்தலின் போது, வலதுசாரி கருத்துடையவர்களின் பக்கங்களை நீக்கி, அவர்களது கருத்துக்கள் மக்களை சென்றடையாமல் ஃபேஸ்புக் இண்டியா அலுவலகம் செய்தது என்றறிகிறேன். இமெயில் எழுதி புகாரளித்தாலும் பதிலளிக்கவில்லை பேஸ்புக் இந்தியா.
பேஸ்புக் இந்தியா பாரபட்சமாக நடந்து கொண்டதும், புகார்களை உதாசீனம் செய்ததும் பேஸ்புக் இந்தியா குழுவில் இருந்தவர்களது குறிப்பிட்ட அரசியல் சார்பு காரணம் (இடதுசாரி?) என தெரிகிறது.
ஒரு நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அந்த தனி மனித விருப்பு வெறுப்புகள் நிர்வாகத்தின் கொள்கைகளையோ, நிர்வாகத்தின் செயலையோ பாதிக்க கூடாது. ஊடகங்கள் அளிக்கும் செய்தியிலிருந்து, பேஸ்புக் இந்தியாவின் தலைமை நிர்வாகி முதல் பல மூத்த அதிகாரிகள் வரை குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையுடையவர்கள் என்பது தெரியவருகிறது (காங்கிரஸ் – இடதுசாரி). இந்த அரசியல் நம்பிக்கையுடையவர்கள் தொடர்ந்து பல தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக (தேர்தல்களில்) தோற்றவர்கள் சமூக வலைதளங்களில் (அதிகாரத்தில்) அமர்ந்து கொண்டு இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை இழிவுபடுத்துகிறார்கள்.
முகநூல் இப்போது அவர்களது கையில் ஒரு கருவியாக உள்ளது. ஃபேஸ்புக் இண்டியாவின் ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் பணியாற்றி, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வேளையில் இந்திய பிரதமரையும், மாநில முதல்வர்களையும் வசைபாடுவது சிக்கலானது. ஃபேஸ்புக் இண்டியா ஊழியர்களின் அரசியல் சார்பு, கோடிக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பேஸ்புக் இந்தியாவினுள் அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்களே சமீப காலங்களில் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளன (முகநூலை பாஜக – ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது என்ற வால் ஸ்டிரீட் ஜர்னலில் வந்த கட்டுரை இது போன்று உங்கள் சண்டையில் எங்களை இழுத்து இந்தியாவின் அரசியலில் தலையிடுவது கண்டிக்கத்தது. மேலும், சமீப காலங்களில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும், கலவரங்கள் உண்டு பண்ணவும் முகநூல் உபயோகப்படுத்தப் பட்டது. ஆனாலும், முகநூல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கலவரத்தை உண்டு பண்ணி, இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதும் அந்த குழு தானா?
முகநூல் பதிவுகளின் உண்மைத்தன்மையை (fact-check) அறியும் பொறுப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது முகநூல் (எடுத்துக்காட்டு: அல்ட் நியூஸ் என்ற ஜிஹாதி அமைப்பு). அந்த வெளி நிறுவனங்கள் எந்த நம்பகத்தன்மையும் இல்லாதவை. அவற்றைக் கொண்டு உண்மைத் தன்மையை எப்படி நிரூபிக்க நினைக்கிறது முகநூல்? நீங்கள் உண்மையை கண்டறிய உபயோகிப்பவர்களும் குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்கள். அவர்கள் பொய்யை மற்றவர்கள் எக்ஸ்போஸ் செய்கிறார்கள். கொரோனா தொற்று பற்றிய பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையை முகநூல் பரிசோதிக்க தவறிவிட்டது. இவற்றையெல்லாம் எப்படி முகநூல் நிர்வாகம் அறியாதிருக்கிறது? இவற்றையெல்லாம் சரி செய்ய, முகநூல் நிர்வாகம் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்”
“கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் போராடிக்கொண்டிருக்கிற வேளையில், உங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள் சமூகமாக இருக்க உதவி, உலகை ஒன்றிணைப்பதே முகநூலின் நோக்கம் என்கிறீர்கள். என்றாலும், கடந்த சில மாதங்களாக முகநூலில் நடப்பவை அதன் நோக்கத்துக்கு எதிராக உள்ளதை காண்கிறோம். 2019 லோக்சபா தேர்தலின் போது, வலதுசாரி கருத்துடையவர்களின் பக்கங்களை நீக்கி, அவர்களது கருத்துக்கள் மக்களை சென்றடையாமல் ஃபேஸ்புக் இண்டியா அலுவலகம் செய்தது என்றறிகிறேன். இமெயில் எழுதி புகாரளித்தாலும் பதிலளிக்கவில்லை பேஸ்புக் இந்தியா.
பேஸ்புக் இந்தியா பாரபட்சமாக நடந்து கொண்டதும், புகார்களை உதாசீனம் செய்ததும் பேஸ்புக் இந்தியா குழுவில் இருந்தவர்களது குறிப்பிட்ட அரசியல் சார்பு காரணம் (இடதுசாரி?) என தெரிகிறது.
ஒரு நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அந்த தனி மனித விருப்பு வெறுப்புகள் நிர்வாகத்தின் கொள்கைகளையோ, நிர்வாகத்தின் செயலையோ பாதிக்க கூடாது. ஊடகங்கள் அளிக்கும் செய்தியிலிருந்து, பேஸ்புக் இந்தியாவின் தலைமை நிர்வாகி முதல் பல மூத்த அதிகாரிகள் வரை குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையுடையவர்கள் என்பது தெரியவருகிறது (காங்கிரஸ் – இடதுசாரி). இந்த அரசியல் நம்பிக்கையுடையவர்கள் தொடர்ந்து பல தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக (தேர்தல்களில்) தோற்றவர்கள் சமூக வலைதளங்களில் (அதிகாரத்தில்) அமர்ந்து கொண்டு இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை இழிவுபடுத்துகிறார்கள்.
முகநூல் இப்போது அவர்களது கையில் ஒரு கருவியாக உள்ளது. ஃபேஸ்புக் இண்டியாவின் ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் பணியாற்றி, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வேளையில் இந்திய பிரதமரையும், மாநில முதல்வர்களையும் வசைபாடுவது சிக்கலானது. ஃபேஸ்புக் இண்டியா ஊழியர்களின் அரசியல் சார்பு, கோடிக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பேஸ்புக் இந்தியாவினுள் அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்களே சமீப காலங்களில் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளன (முகநூலை பாஜக – ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது என்ற வால் ஸ்டிரீட் ஜர்னலில் வந்த கட்டுரை இது போன்று உங்கள் சண்டையில் எங்களை இழுத்து இந்தியாவின் அரசியலில் தலையிடுவது கண்டிக்கத்தது.
மேலும், சமீப காலங்களில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும், கலவரங்கள் உண்டு பண்ணவும் முகநூல் உபயோகப்படுத்தப் பட்டது. ஆனாலும், முகநூல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கலவரத்தை உண்டு பண்ணி, இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதும் அந்த குழு தானா?
முகநூல் பதிவுகளின் உண்மைத்தன்மையை (fact-check) அறியும் பொறுப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது முகநூல் (எடுத்துக்காட்டு: அல்ட் நியூஸ் என்ற ஜிஹாதி அமைப்பு). அந்த வெளி நிறுவனங்கள் எந்த நம்பகத்தன்மையும் இல்லாதவை. அவற்றைக் கொண்டு உண்மைத் தன்மையை எப்படி நிரூபிக்க நினைக்கிறது முகநூல்? நீங்கள் உண்மையை கண்டறிய உபயோகிப்பவர்களும் குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்கள். அவர்கள் பொய்யை மற்றவர்கள் எக்ஸ்போஸ் செய்கிறார்கள். கொரோனா தொற்று பற்றிய பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையை முகநூல் பரிசோதிக்க தவறிவிட்டது. இவற்றையெல்லாம் எப்படி முகநூல் நிர்வாகம் அறியாதிருக்கிறது? இவற்றையெல்லாம் சரி செய்ய, முகநூல் நிர்வாகம் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்”
- ரவிசங்கர் பிரசாத், அமைச்சர்!
இதற்கு மேல் பேஸ்புக் இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் அடுத்து நிறுத்தப்படுவது பேஸ்புக் தான் என்பதை இந்த கடிதம் தெளிவுபடுத்துகிறது
Get real time update about this post categories directly on your device, subscribe now.