போலி செய்தி பரப்பிய டைம்ஸ் ஆஃப் இண்டியா! ஆதராத்தோடு போலி நிருபர்களை காலி செய்த அண்ணாமலை!

அஸ்ஸாம், கர்நாடகா, ம.பி, மேற்கு வங்கம், குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு அதிக இழப்பீடும் தமிழகத்துக்கு மட்டும் குறைந்த இழப்பீடும் கொடுத்து மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது” என போலி செய்தியை ஜூலி மாரியப்பன் எனும் நிருபர் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் எழுதினார். அந்த போலி செய்தி பிரசுரமாகி வெளிவந்தது.

உடனே சுதாரித்து கொண்ட தமிழக பாஜக தக்க பதிலடி கொடுத்தது. மேலும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் மேலும் தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதி எவ்வளவு வழங்கியுள்ளது என டேட்டாவுடன் ஒரு ட்வீட் பதிவை போட்டார அண்ணாமலை, மேலும் அந்த பதிவில் “டைம்ஸ் ஆஃப் இண்டியா இம்மாதிரி செய்திகளை விடுமுன் உண்மையை சரிபார்க்க வேண்டும். இந்த குறிப்பிட்ட நிருபர் ஜூலி உள்நோக்கத்துடன் தொடர்ந்து போலி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.” மோடி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் மத்திய அரசினை பற்றியும் மோடியை பற்றியும் தவறான பொய்யான செய்திங்களை பரப்பிவருகிறார். என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

உடனே…. மற்ற ஊடகவியலாளர் பொங்கினார்கள் அண்ணாமலை நிருபரை தவறாக சித்தரிக்கிறார் என்று. பல நடுநிலையற்ற ஊடகவாதிகள் அண்ணாமலையை வசைபாட ஆர்மபித்தார்கள். அதில் சில பேர் ஷபீர் அஹமது, அரவிந்த் குணசேகர் போலி செய்தி வெளியிட்ட ஜூலிக்கு ஆதரவாகவும் உண்மையை வெளியிட்ட அண்ணாமலைக்கு எதிராகவும் கூக்குரலிட்டார்கள்

அண்ணாமலை ஊடகத்தை குறிவைக்கிறார். ஜூலி சிறந்த மூத்த நிருபர்” என முட்டுக்கொடுக்க சவுக்கு சங்கர் ஒருபடிமேல் “ஜூலியும் ஷபீரும் சிறுபான்மையினர். அதனால் தான் அண்ணாமலை தாக்குகிறார். மதவெறி பிடித்த அண்ணாமலை” என உருட்ட ஆரமபித்துவிட்டார்.

பொய்பேசிய நிருபருக்கு ஆதரவுகொடுக்கும் நபர்கள் தமிழகத்தில் அதிகம்.என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனிடையே பாஜகவினரோ ஊடகத்துக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? அடித்தால் அடி தான் பதில்! ஊடகங்கள் என்று தங்களை நீ என்ன வேண்டுமானால் எழுதலாம், அதை பாஜக பார்த்துக் கொண்டிருக்கும் என்ற காலம் ‘மலை’ ஏறிவிட்டது! என்று பாஜகவினர் அண்ணாமலையை கொண்டாடிவருகிறார்கள்.

Exit mobile version