கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள்! அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்!

கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரச் சட்டத்தை மத்திய அமைச்சரவை கொண்டுவந்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு ஆகும். கூட்டுறவு வங்கி என்று சொல்லலாமே தவிர இதில் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை. உதாரணம் இந்த வங்கிகளுக்கு தேர்தல் ஒன்றை நடத்துக்கிறார்கள் அதில் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவியை கைப்பற்றுகிறார்கள் இதில் போட்டி என்று வந்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சின்டிகேட் அமைத்து கொண்டு கூட்டுறவு வங்கியின் நிர்வாக உறுப்பினர்கள் பதவிகளை பங்கிட்டு கொள்கிறார்கள் இதனால் இந்த வங்கிகளில் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன.

மேலும் பயிர்களுக்கான காப்பீடு தொகைகளை மத்திய அரசு இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிறது அந்த காப்பீடுகள் உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஇந்த கூட்டுறவு வங்கிகள் வழங்குவது கிடையாது மேலும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி மேலும் கையூட்டு கொடுக்கும் முக்கிய பிரமுகர்களுக்குத் தான் வழங்கப்படுகிறது. இந்த விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதில் பெரிய அளவில் கூட்டுறவு வங்கிகளால் முறைகேடு நடைபெறுகிறது . மேலும் ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில்இந்த கூட்டுறவு வங்கிகள் வருவதால் மக்களின் நம்பிக்கையை இந்த வங்கிகள் பெறமுடியும். முக்கியமாக இந்த வங்கிகளின் தலைவர் என்ற பதவி ரத்து செய்ய வேண்டும்.

மேலும்இப்போதுள்ள முறைப்படி, கொடுக்கும் கடனுக்கு நபார்டு வங்கி ஒரு குறிப்பிட்ட சதம் வட்டியுடன் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கு நிதியை ஒதுக்கும். மாநிலக் கூட்டுறவு வங்கி அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்கும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு (சங்கம்) கடன் தருகிறது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து விவசாயிகளுக்குக் கடன் வழங்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டால் நபார்டு வங்கி எவ்வளவு வட்டியில் கடன் தருகிறதோ அதே வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறமுடியும்

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம் இருக்கும் வங்கியில் கடன்பெற்று விவசாயம் செய்ய நினைக்கும் உண்மையான விவசாயிகளுக்கு உண்மையில் இது வரப்பிரசாதம் தான்.

நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவின் படி, இந்தியா முழுவதுமுள்ள 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை வைத்திருக்கும் 58 மல்டி கோ-ஆபரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி மக்களின் 4.48 லட்சம் கோடி ரூபாய்க்குப் பாதுகாப்பு கிடைக்கும்

Exit mobile version