தஞ்சை உண்ணாவிரத போராட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி, பாஜக சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் கடந்த 5 ஆம் தேதி காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். மேலும் அறப்போராட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை ஒருகை
பார்த்து விட்டார்.
அவர் பேசியதாவது ; கரும்பு விவசாயிகளுக்கு 1400 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்..நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவேண்டும்….
இவற்றை 50 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் இதற்காக பாஜக போராடும்…முதல்வர் வீடு முன்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
சாராய விற்பனையை உயர்த்துவதற்காக மாதாமாதம் ரிவிவ்யூ மீட்டிங் நடத்தி வரும் திமுக அரசு, மோடி அரசின் விவசாய திட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு முறையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிய ஒரு ரிவியூவ் மீட்டிங்கூட நடத்தியதே இல்லை. சாராயம் விற்கும் அமைச்சருக்கு மரியாதை கொடுத்து அருகிலும், விவசாய அமைச்சருக்கு மரியாதை மறுத்து தொலைவிலும் வைத்திருக்கும் ஒரே அரசு, தி.மு.க அரசுதான்.
கர்நாடகத்தில் அதிகமாக பணம் சம்பாதிப்பது உதயா டிவி நிறுவனம். அதனுடைய உரிமையாளர் கலாநிதி மாறன். அவரது தம்பி தயாநிதி மாறன். பணம் எப்படி வந்தாலும் பரவாயில்லை, கல்லா பெட்டியை திறந்து பணத்தை வசூல் செய்துகொண்டே இருப்பார்கள். மனசாட்சியே இல்லாதவர்கள்.
தமிழக மக்களுக்கு உண்மையாக உழைத்து வரும் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி இன்னொரு முறை, தயாநிதி மாறன் கொச்சைப்படுத்தினால், உங்களைப்பற்றிய எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும்
கர்நாடகத்தில் என்னென்ன பித்தலாட்டங்களை தயாநிதி மாறன் குடும்பம் செய்துகொண்டிருக்கிறது என்பது வெளியிடப்படும்.
யாரிடமும் கைகெட்டி நிற்பதற்காக நான் பாரதிய ஜனதா கட்சி தலைவராக வரவில்லை.
நீ எனக்கு நண்பன், நான் உனக்கு நண்பன் என்கிற அரசியலுக்கு இடமில்லை. அடிப்படை வரை கிளறி பேசுவோம். திமுக செய்த துரோகத்தை ஒவ்வொன்றாக பட்டியலிடுவோம்.
விவசாயம் செய்யாமல், விவசாயிகளைப் பற்றி தெரியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற கட்சி திமுக. உரக்க பேசுவோம். உண்மையை சொல்வோம். வீதி வீதியாக போவோம்.தலைவரே இல்லாத கட்சி, காங்கிரஸ் கட்சி. நான்கு ஐந்து பேரை வைத்து பஞ்சர் ஒட்டி நடத்தப்படுகிற கட்சி அதுதமிழகத்தில் உள்ள மூன்று முதல்வர்களில் எந்த முதல்வரை சந்திக்க வேண்டுமென்றாலும், கணெக்சன் வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















