இந்தியா – பாகிஸ்தான் இடையே பேர் மூளும் அபாயம் உள்ள நிலையில், நேற்று இரவிலும், எக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்களை இறக்கி இந்தியா பயிற்சி மேற்கொண்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரே பேசியதைத் தொடர்ந்து, இந்தியா அவர்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில்,பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால், போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவின் போர் பயிற்சியால் பதற்றம்
இந்த சூழலில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கா விரைவுச் சாலையில், அதிநவீன போர் விமானங்களை இறக்கி இந்திய விமானப்படை நேற்று ஒத்திகையில் ஈடுபட்டது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச் சாலையில், ரஃபேல், ஜாகுவார், மிராஜ் போன்ற போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படையினர் ஈடுபட்டனர்.
போர் மூளும் சூழலில், அவரச காலங்களில் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான பயிற்சி தான் இது. மேலும், போர் விமானங்கள அவசர காலங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் விதமான பயிற்சிதான் இது. எந்த நேரத்திலும் போர் விமானங்களை தரையிறக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் ஓடுதளமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த கங்கா விரைவுச் சாலை. இந்த விரைவுச் சாலை, பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.நேற்று பிற்பகலில் தொடங்கிய இந்திய விமானப்படையின் ஒத்திகை, இரவிலும் தொடர்ந்தது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் ரபேல், மிராஜ், ஜாகுவார் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்திய விமானப்படை பயிற்சி மேற்கொண்டது. விரைவு சாலையின் திறனை மதிப்பிடுவதற்காக இந்த பயிற்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.இது பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. குறிப்பாக ககுவார் விமானங்கள் குண்டு மழை பொழியும் விமானம் ஆகும் இது இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளது பெரும் பதற்றத்தை கிளப்பி உள்ளது.
இதரர் கிடையே பாகிஸ்தான் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் உளவு பிரிவு ( ஐஎஸ்ஐ ) தலைவர் பதவியில் இருந்த அசிம் முனீரை நீக்கினார். ஐஎஸ்ஐ வரலாற்றில் முதல்முறையாக, பதவியில் இருந்த ஒரு தலைவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கப்பட்டது இதாக பார்க்கப்பட்டது. இது முனீர் மற்றும் கானுக்கு இடையிலான உறவை மோசமாக்கியது. உண்மையில், இம்ரான் கானின் சிறையில் இருப்பதற்கு அசிம் முனீர் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஷெரீப் மற்றும் முனீர் இருவரையும் இம்ரான் கான் முன் நிறுத்தியுள்ளன. கானின் பிடிஐ கட்சி நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாறி வருகிறது, மேலும் அதன் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை ஆதரவையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும் போராட்டங்கள் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதால், ஷெரீப்பும் முனீரும், இம்ரானை கானை சமாதானப்படுத்த அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.