திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தன்னை மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வருவதாகவும் வருவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மர்ம நபர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க என காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் தமிழக முதல்வர் கையில் இருக்கும் காவல் துறையினரோ துரித நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாகஇருந்துள்ளார்கள். இதன் விளைவு தற்போது நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தாக்குதலில் படுகாயம் அடைந்த நேசபிரபு அவர்களின் சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் அரசு அறிவித்துள்ளது. தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.
அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.
திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை அளித்திருந்த நிலையில் சமூக வலைத்தளமான X ல் #பாதுகாப்பில்லா_தமிழகம் என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.