தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த பழைய பெருங்காய டப்பாக்கள் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் ஜூன் 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. “மணிரத்னம் இப்படிப்பட்ட மோசமான திரைப்படத்தை எடுத்திருக்கிறாரே” என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதே போல் இதில் திரிஷாவின் கதாபாத்திரமும் திரிஷாவின் மீது கமல்ஹாசனும் சிம்புவும் மோகம் கொள்வது போல் காட்சிப்படுத்தியது விதமும் பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 8 நாட்களில் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 87 கோடி மட்டுமே உலகளவில் வசூல் செய்துள்ளது.இந்தியன் -2 திரைப்படத்துக்குப் பிறகு மிகப் பெரிய தோல்வியை கமல் சந்தித்துள்ளார்.முதல்நாளில் தக் லைஃப் வெளியாகும்போது 4,917 ஷோவ்ஸ் (காட்சிகள்) வெளியானது. 6-ஆவது நாளில் அது 2,089 காட்சிகளாக குறைந்தது. தற்போது அதும் காலியாகி விட்டது.
மேலும் இதே நேரத்தில் வெளியான பாத்திமா பரமசிவன் படம் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. தக் லைஃப்” என்ற மிக பெரிய சுனாமி முன் இத்திரைப்படத்தை பலரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது இத்திரைப்படத்திற்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது.மத மாற்றம் அதற்கு இருக்கும் பின்னணியை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயா தேவியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் குறித்தும், மற்றும் மத மாற்றம் அதற்கு பின் இருக்கும் பின்புலத்தை பற்றி சொல்வதில் முதல் படியை கடந்துள்ளார்.
தக் லைஃப் படத்தை ஓரங்கட்டிய காளி வெங்கட்
“தக் லைஃப்” திரைப்படம் வெளியான மறு நாள் ஜூன் 6 ஆம் தேதி காளி வெங்கட் கதாநாயகனாக நடித்த “மெட்ராஸ் மேட்னி” என்ற திரைப்படம் வெளிவந்தது. சின்ன பட்ஜெட் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு புரொமோஷன் பெரிதாக அமைய வாய்ப்பில்லாமல் போனது. தக் லைஃப்” என்ற பூதத்திற்கு முன் இத்திரைப்படத்தை பலரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது இத்திரைப்படத்திற்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது. மிகவும் சின்ன பட்ஜெட்டில் தயாரான “மெட்ராஸ் மேட்னி” திரைப்படத்தில் காளி வெங்கட் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரோஷினி ஹரிபிரியன், ஷெல்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கார்த்திகேயன் மணி என்பவர் இயக்கியுள்ளார். பாலசரங்கன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் சத்யராஜ் ஒரு அறிவியல் புனைக்கதைகளை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார். அவரிடம் மிடில் கிளாஸைச் சேர்ந்த சராசரியான ஆளை பற்றி கதை எழுத முடியுமா என்று ஒருவர் சவால் விடுகிறார். அவ்வாறு அந்த கதைக்காக ஒரு ஆட்டோ டிரைவரை சந்திக்க நேர்கிறது. அந்த ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை கதையாக எழுத விரும்பிகிறார். அந்த ஆட்டோ டிரைவர்தான் காளி வெங்கட். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் காளி வெங்கட் என்னென்ன பிரச்சனைகளை தனது வாழ்க்கையில் சந்திக்கிறார் என்பதுதான் கதை.
இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “மெட்ராஸ் மேட்னி திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. காளி வெங்கட்டின் நடிப்பு அபாரமாக உள்ளது. நிச்சயம் இத்திரைப்படத்தை பார்க்கலாம்” என கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு நல்ல திரைப்படம் அதற்கான விளம்பரத்தை தானே தேடிக்கொள்ளும் என்ற பிரபல வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக “மெட்ராஸ் மேட்னி” திரைப்படம் அமைந்துள்ளது.