சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.
மிகவும் முக்கியமான இந்த பகுதியில் விநாயகர் விசர்ஜனம், இறந்தவர்களுக்கு காரியம், திதி கொடுத்தல், ஆடி-18 அன்று காவிரித் தாய் வழிபாடு, புதுமணத் தம்பதிகள் தாலி பிரித்து போடுவது, கோயில்களின் திருவிழா காவடி, கரகம் புறப்படுவது போன்ற இந்து சமய நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
மேலும் மீன் கழிவுகளால் சுகாதாரம் சீர்கெட்டு நோய் தொற்று ஏற்படும்.
வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆகவே,
பராம்பரிய விழாக்கள், வழிபாட்டு உரிமை, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க மீன் மார்க்கெட் கட்டப்படுவதை கைவிட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் நகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மீன் விற்கும் போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீன் விற்கும் போராட்டம் மாற்றப்பட்டு கோரிக்கை ஆர்ப்பாட்ட மாக இன்று 06.08.2020 வியாழக்கிழமை காலை நடத்தப்பட்டது.
மாநில செயலாளர்
கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் க. பாலாஜி, மாவட்ட செயலாளர் அரு. செல்வம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் செ.சபரிலிங்கம், துணைத் தலைவர் சீனுவாசன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கண்ணன், அமைப்பாளர் அய்யப்பன், வைத்தீஸ்வரன் கோயில் தனசேகர், சீர்காழி நகரத் தலைவர் வெற்றிவேல், நகர செயலாளர் சேகர், இளைஞரணி தலைவர் விக்ரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















