உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது.
இன்றைய வைரஸ் பேரிடர் காலத்தில் ..
நமது 130 + கோடி மக்கள் தொகையில் ..சுமார் 80 கோடி மக்கள் ….அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன் எனில்….
- இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இல்லாத நிலை …
- அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை என்பது இல்லாத நிலை….
- ஆதார், வங்கி கணக்கு இணைக்கப்பட வாய்ப்பில்லாத நிலை.
- மொபைல் வழி பணம் செலுத்தும் டிஜிட்டல் வசதிகள் சாமானிய மக்கள் பயன்பாடு வரை உருவாக்கப்படாத நிலை.
- நாட்டின் வரி வகைகள் GST மூலம் ஒழுங்குபடத்தப்படாத நிலை.
- அரசின் அனைத்து சேவைகளும், பொது மக்களின் பயன்பாடுகளும் டிஜிட்டல் முறைக்கு மாறாத நிலை..
- பல கோடி ஏழை பெண்களுக்கான இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் இல்லாத காலம்..
- மேற்கூறிய கட்டமைப்புகள் எதுவும்… 5 வருடங்களுக்கு முன் வரை… இந்தியாவில் கடைக்கோடி இந்தியன் வரை முழுமையாக ஏற்படுத்தப்படாததால்… அரசு வழங்கும் மானியங்கள் அனைத்தும் முழுமையாக ஏழைகளை போய் சேராமல்..இடையில் பல நிலைகளில்,,,வகைதொகை இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலை.
அரசின் உதவிப் பணம், உணவு பொருட்கள், விவசாயிகள் மானியம், ஆதரவற்ற பெண்களுக்கான உதவி, மாற்று திறனாளிகளுக்கான உதவி, முதியோருக்கான உதவி, மருத்துவ வசதி, சாமானிய மக்களும் தொற்றை அறிந்து கொள்ளும் மொபைல் செயலி வசதி, அத்தியாவசிய பொருட்களின் இணைய வழி விற்றல் & வாங்கல் , இன்ன பிற சேவைகள் அனைத்திலும்…டிஜிட்டல் இந்தியா கட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில்.. ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லையென்றால்…..இந்த பேரிடரை பயன்படுத்தி …அதிகார மட்டத்தில்…மிகப் பெரும் ஊழலும், கொள்ளையும் நடந்திருக்கும் !
உதவி தேவைப்படும் 80 கோடி மக்களும் … அரசு வழங்கும் அவசர அத்தியாவசிய உதவிப் பணம் & உணவுப் பொருட்கள்,இன்ன பிற உதவிகள் முழுமையாக கிடைக்காமல் …ஆகப்பெரும் இன்னலுக்கும், பட்டினிக்கும் …ஆளாகி இருப்பார்கள் !
அனைத்திற்கும் மேலாக..மக்கள் …தங்களுக்கு தேவைப்படும் உதவிக்காக…ஆங்காங்கே… ..அரசியல் கட்சிகளை சார்ந்திருக்கும் நிலை நீடித்திருக்கும் !!
மோடி அரசு…ஐந்தே வருடங்களுக்குள் .. முனைப்புடன் முழுமையாக செயல்படுத்திய ஆதார், அனைவருக்கும் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி , இன்ன பிற துறைவாரியான சீர்திருத்த சட்டங்கள், இவற்றை இணைக்க உதவிய டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் தான்…
இன்றைய உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆகப்பெரும் பேரிடரான சீன வைரஸ் காலத்தில்… இந்திய மக்களுக்கான உதவியை.. வழியில் கொள்ளையடிக்கப்படாமல்…..முழுமையாக மக்களுக்கு சென்று சேர்ப்பதை .. அமைதியாக …ஆர்ப்பாட்டமில்லாமல்..பெரும் புரட்சியாக… நிகழ்த்திக் கொண்டிருக்கிறது !
பல கட்சிகள் , பல அரசியல்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு….மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் ஆட்சி நிர்வாகத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது… இது போன்ற..காலமாற்றத்திற்கு ஏற்ப…வாழ்வுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் சீரான.. நேரான… வெளிப்படை தன்மை கொண்ட …நிர்வாக கட்டமைப்பு தான்!
அந்த வகையில்…..மோடி அரசு..ஐந்தே வருடங்களுக்குள் …130+ கோடி மக்களுக்கான ஆகப்பெரும் இந்தியாவில் மகத்தான வெற்றியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது…என்பது மறுக்க முடியாத எதார்த்த உண்மை.