கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம், மரவனத்தம் பகுதியைச் சேர்ந்த 300 விவசாயிகள் தங்களது வளர்ப்பு மாடுகள் மூலம் சேகரிக்கப்படும் பாலை தினமும் காலை மாலை என இரு நேரமும் பால் சொசைட்டியில் ஊற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையை முன்னிட்டு பால் சொசைட்டி மூலம் பால்கோவா கொடுப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
அதேபோல் இந்த வருடமும் திருக்குன்றம் பகுதியைச் சேர்ந்த 250 பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களது கணக்கில் இருந்து 250 ரூபாய் பிடித்தம் செய்து பால்கோவா கொடுக்கப்பட்டுள்ளது இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பால் உற்பத்தியாளர்கள் மறுநாள் காலை பால்கோவா வை திறந்து பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சின்னசேலம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்பொழுது அங்கே இருந்த அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது ஏழு நாட்கள் மட்டுமே கெட்டுப் போகாமல் இருக்கும் என்றும் அதன் பிறகு கெட்டுப் போய்விடும் என்றும் கொடுக்கப்பட்ட ஃபாக்ஸ் இருக்கிறது என்று தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு போதே கொடுத்து விட்டதாகவும் எப்பொழுதும் தீபாவளிக்கு முதல் நாள் கொடுப்பதாகவும் இந்த வருடம் இதுபோல் நடந்து விட்டதாகவும் தற்போது மூன்று நாட்களுக்கு விடுமுறை உள்ளதால் திங்கள்கிழமை வந்து உங்களுடைய குறைகளை அதிகாரிகளிடம் சொல்லுங்கள் என கூறினார்.
இதனை அடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பால்கோவாவை கீழே கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மேலும் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காலாவதி தேதிக்குள் கெட்டுப் போயிருந்தால் மீண்டும் புதிய இனிப்பு வழங்கப்படும் என்றும் கொடுக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸில் காலாவதி தேதி குறிப்பிட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தனர் இருப்பினும் ஆவின் மூலம் விநியோகம் செய்யப்பட்ட பொருட்களை அனைத்தும் மட்டுமல்லாமல்பொதுமக்கள் எந்த பொருட்கள் வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்த பிறகு சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்