முதல் முறையாக இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற 5பேர் தேர்வு.

 இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக, 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் ஏப்ரல் 29ல் பணியில் இணைய உள்ளனர்.

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் பல்வேறு படைப்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ராணுவத்தில் இதுவரை பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவற்றில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் காலாட்படை போன்ற முக்கிய போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள் பணியாற்றவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணியாற்ற பெண்கள் கடந்த ஒா் ஆண்டாக பயிற்சி பெற்று சனிக்கிழமை பயிற்சியை முடித்து தோ்ச்சி பெற்றுள்ளனா்.இந்நிலையில் முதல் முறையாக சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 5 பெண் அதிகாரிகள், பீரங்கிப் படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் ஏப்ரல் 29ல் பணியில் இணைய உள்ளனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version