மேக் இன் இந்தியா மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்தி றன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
பிகாரில் உள்ள மாதேபுராவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மின்சாரரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு மோடி 2015 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த தொழிற் சாலை 12000 குதிரைதிறன் கொண்ட மின்சார ரயில் இஞ்சின்
களை உருவாக்க பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டாம் நிறுனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மாதேபுராவில் உருவாக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட முதலாவது ரயி ல் இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் நேற்று இது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தச் சாதனையின் மூலம், அதிக குதி ரைசக்தித் திறன் கொண்ட ரயில் இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமை கொண்ட 6வது நாடாக பெரு மைக்குரிய பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது
உலகில் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட இன்ஜின் அகல ரயில் பாதை யில் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பாருங்கள் மோடி ஆட்சிக்குவந்த பிறகு தான் இந்தியா உலகளவில் இது தான் முதல் தடவை என்று பெயர் வாங்கிக்கொண்டு இருக்கிறது.
ஜிபிஎஸ் மூலம் இந்த ரயில் இன்ஜின் இயக்கத்தைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. வழக்கமான மின் வழித் தடத்தி லும், பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் அதிக உயரத்தில் மின்பாதை உள்ள தடங்களிலும் பயணிக்கக் கூடியதாக இந்த என்ஜின் இருக்கும்.
இந்த என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப் பட்டுள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் செல்லும் இந்த ரயில் இஞ்சின் மாதிரி 800 இஞ்சின்களை தயாரித்துகொண்டு இருக்கிறது மாதேபுரா தொழிற்சாலை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















